Category: அபிப்பிராயங்கள்

இந்தாங்கோ இனிப்புத் தட்டு

Kiri santh- April 20, 2024

வாழ்வில் இனிப்பதைப் பகிர்வதே முதன்மையானது. நாம் வாழும் காலம் தினந்தோறும் எதிர்மறை மனநிலைகளாலும் கசப்பின் கசடுகளாலும் பனித்திரையெனச் சூழப்பட்டிருக்கிறது. இதனிடையில் இந்தா வைத்துக் கொள் என வயதான பாட்டியோ தாத்தாவோ யாருமறியாமல் கைபொத்தி அழுத்தித் ... Read More

கவிப்புதிர்

Kiri santh- April 19, 2024

ஓர் அறிவிப்பு 52 வது சுவிஸ் இலக்கியச்சந்திப்பைத் தொடர்ந்து 53வது இலக்கியச் சந்திப்பை இத்தாலியின் சிசில் தீவில் நடத்தலாம் என இருக்கிறேன். அனலைதீவில் நடத்த ஆதரவளித்த நண்பர்கள் ஐரோப்பாவின் காலடியில் நசிவுண்டு கிடக்கும் சிசில் ... Read More

தவளைத் தாவல்: கடிதம்

Kiri santh- April 19, 2024

கவிதை ஒன்றில் மாறுகின்ற பகுதி மற்றும் நிலையான பகுதி என்று ஏதாவது உண்டா? தற்கால தமிழ் கவிதைகளில் கதைகூறும் பாணியில் கவிதை நகர்வது ஆரோக்கியமானதா? றியாஸ்குரானாவின் கவிதைகளை எப்படி நோக்குகிறீர்கள்? அவரால் மாயயதார்த்தம் அல்லது ... Read More

மாய மருத்துவம்

Kiri santh- April 19, 2024

வசீகரமான ஒரு பரிசை, ஒரு ஆச்சரியத்தை முதன் முதலில் ஒருவருக்கு அளிக்கப் போகும் மனம் சிலிர்த்துக் கொண்ட மயிர்க்கொட்டியென சுணைத்தபடியும் உள்ளூர வியந்தபடியும் நடந்து கொள்ளக்கூடியது. நான் யாருக்கும் பரிசளிப்பதில்லை. அல்லது ஒரு பொருளை ... Read More

எய்யப்படுதல்

Kiri santh- April 18, 2024

உள்நெஞ்சின் ஊற்றிலிருந்து அன்றாட வாழ்விற்குள் தினமும் எய்யப்படுவதே வாழ்வா? உறக்கத்தை ஊற்றில் உறைதல் எனக் கொண்டால் விழிப்பு நனவிற்குள் நுழைதலா? சபரிநாதனின் நச்சுச்சுனை கவிதையில் உள்ள எய்யப்படுதல் என்ற சொல் மொத்த வரிகளையும் அதன் ... Read More

ஒரு புரட்சிகர குட்மோர்னிங்

Kiri santh- April 17, 2024

ஒரு புத்தக நிகழ்வில் நானும் பேச்சாளர்கள் பட்டியலில் உள்ள அழைப்பொன்றை முகநூலில் அதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். வெளியானதுதான் தாமதம், சிலர் பாய்ந்து விழுந்து அதற்குக் கண்டனமும் கடும்விசனமும் தெரிவித்திருப்பதாக நண்பர்கள் சொல்லினர். இனிய நண்பர்களே, ... Read More

இளங்கவிகளுக்கு சில அட்வைஸ்கள்

Kiri santh- April 16, 2024

தமிழ்கூறும் நல்லுலகிலே புதிதாக எழுதவரும் இளங்கவிகளுக்கு சீனியர் கவிஞர்கள் அட்வைஸ்களை வழங்குவது வழமையும் கடமையும். சபரிநாதன், பெருந்தேவி, போகன் சங்கர் ஆகிய மூவரினதும் சில கவிதைகள் தங்களது அனுபவங்களாகவும் அட்வைஸ்களாகவும் சுவாரசியமாக இருந்தன. சில ... Read More

பாவைக்கைச்சுடர்

Kiri santh- April 14, 2024

அண்மையில் வாசித்த கவிதைகளில் ஒளி என்ற இந்தக் கவிதை இன்னதென்று அறியாத புதுவுணர்வை மனதிற்குள் உண்டாக்கியபடியே இருக்கிறது. மனசு கவிதையின் இறுதி வரிகளை உருட்டியபடியே இருக்கிறது. எளிமையான ஒரு கவிதை தான். ஆனால் ஏணைக்குள் ... Read More

அழுதுகொண்டே மலையேறும் சிறுவன்

Kiri santh- April 13, 2024

சபரிநாதனின் 'தூஆ' என்ற கவிதைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பண்டிகை நாளின் விடியலில் முழுகித் தலை இழுத்துப் புத்தாடை அணிந்த பின் ஐந்து நிமிடத்திற்கொருமுறை தன்னழகை வியக்கும் சிறுவனைப் போலத் தொகுப்பை திரும்பத் திரும்ப ... Read More

மெய்த்துயர்

Kiri santh- April 5, 2024

வணக்கம் கிரிசாந், இருத்தலியம் என்றால் என்ன? இது கவிதைகளில் பயன்படுத்தப்படுகிறதா?உதாரணங்கள் தர முடியுமா? கவிதைகளுக்கும் கோட்பாடுகட்குமான சம்பந்தம் என்ன? கவிதைகள் கோட்பாட்டின் பிரகாரமாகத்தான் எழுத வேண்டுமா?இந்த கவிதையில் இன்ன கோட்பாடு என எப்படி அடையாளம் ... Read More