விசும்பு ஆடு அன்னம்

Kiri santh- April 30, 2024

சிறுவயதிலிருந்தே தேர் என்பது இருப்பதில் ஆகப்பெரிய அசையும் மரச்சிற்மென மனதில் ஆகியிருக்கிறது. குரும்பைகளை வைத்து ஈர்க்கில் கோர்த்து ஆக்கும் குரும்பட்டித் தேர் முதல் ஆயிரமாயிரங் கரங்கள் தொட்டு வடக்கயிறால் இழுக்கும் பெருந்தேர் வரை எல்லாமே ... Read More

ஒளிக்குருத்து

Kiri santh- April 29, 2024

சங்கப் பாடல்களில் உள்ள ஒலியிழைகள் நுண்ணியவை. சொற்கள் சர சரவென நீர்த்தொட்டிக்குள் விழுந்த பாம்பென ஒலியை நோக்கித் தலையெழுந்தபடியே இருப்பவை. அவ்வெழுகை நேரிடையாக எழும் கவிதைகள் உள்ளெழுச்சியில் பாடலெனத் திகழக்கூடியவை. இந்தக் குறிப்பில் உள்ள ... Read More

கறுமலர்க்காடு

Kiri santh- April 28, 2024

கவிதை என்பது ஒன்றை இன்னொன்றாக்கிக் கொண்டேயிருக்கும் கலை. கருங்கற்பாறைகளாலான கரைகொண்ட குளமொன்றில் செவ்விதழ்கள் உரிந்தும் உரியாமலும் நீண்டு கிடக்கும் தாமரைகள். காற்று உய் உய் என விசிறியடிக்க மழை பலத்துப் பெய்யும் முன்னிரவின் தொடக்கம். ... Read More

ஈழமா? தமிழீழமா? : ஒரு கடிதம்

Kiri santh- April 27, 2024

"தும்பி" சிறுவர் இதழ் குறித்த உங்கள் சமீபத்திய பதிவு ஒன்று அவ்விதழ் ஈழத் தமிழர்களுக்கு ஏன் முக்கியம் என்பதாக ஆரம்பிக்கிறது. இந்த ஈழத்தமிழர் என்கிற பிரயோகம், முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மைச் சமூகங்களைப் பொருட்படுத்தாத ... Read More

முதுவான் கவிதைகள்

Kiri santh- April 27, 2024

உலகிலே பேசப்படும் மொழிகளிலெல்லாம் காதல் அரும்பவும் தழைக்கவும் பூக்கவும் கூடிய யாவிலும் உள்ள பொதுத்தன்மைகள் மாறாது. காதல் எங்கு பூப்பினும் அதன் சுகந்தம் பரவிக் கொண்டேயிருப்பது. ஆதார விசைகளில் காதல் உண்டாக்கும் மாயங்கள் ஒன்று ... Read More

அதிகாலையை எழுப்பியது குற்றம்

Kiri santh- April 26, 2024

பழந்தமிழ் இலக்கியங்களை அவற்றின் சொல்லிணைவுகளின் வடிவிற்காக சிறுவயதில் வாசித்திருக்கிறேன். இரண்டு சொற்கள் இணையும் போது உண்டாகும் இழைவு பொன்னணியில் வைரச் சுட்டிகை போற் துலங்கும். இன்னொரு பருவத்தில் அதன் இசைக்காக வாசித்திருக்கிறேன், சொல்லும் போது ... Read More

தும்பி: அருகும் கனவுகளின் பேரிறக்கை

Kiri santh- April 25, 2024

ஐந்து வருடங்களுக்கு முன் எமது பசுமைச்சுவடுகள் அமைப்பு தொடங்கி சிறுவர்களுக்கான உரையாடல்கள், கதைகூறல்கள் ஆரம்பித்த காலகட்டங்களில் கிரிசாந் மூலமாக தும்பியின் அறிமுகமும், தன்னற வெளியீடுகள் பற்றியும் அறிந்தோம். செயற்பாட்டு தளங்களில் வாசிப்பின் தொடரியக்கத்திற்கு இவை ... Read More

மிடிமை

Kiri santh- April 25, 2024

கவிஞர்கள் இவ்வுலகின் மிடிமைகள் மீது கொள்ளும் கோபமென்பது இல்லாமையின் மீது உருவாகும் அனல். கவி தன் சொற்களில்லாத வேளையில் மாபெரும் இன்மையில் உழல்பவர். இல்லாமை கொன்று போடும் கோபத்தின் எல்லைக்குச் செல்வது பாரதியின் சொற்களிலும் ... Read More

கருணையின் முன் நீட்டப்படும் கை

Kiri santh- April 24, 2024

தும்பி சிறுவர் இதழை ஈழத்தமிழர்கள் ஏன் வாங்க வேண்டும்? இப்பொழுது அவ்விதழ் நிறுத்தப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கும் வேளையில் ஈழத்தமிழர்கள் எவ்விதம் அவர்களின் செயல்களுக்குக் கைகொடுக்கலாம்? அவர்களது இவ்விடர் நேரத்தில் நாம் ஏன் உடனிருக்க வேண்டும்? ... Read More

குறையொன்றுமில்லை…

Kiri santh- April 24, 2024

நவீன தமிழில் குழந்தைகளைப் பற்றி எழுதப்படும் கவிதைகளை கூர்ந்து அவதானித்து வருகிறேன். கவிகளின் மனதளவில் மிக அதிகமான குழந்தைகள் பழைய தத்துவார்த்தச் சுமைகள் நீங்கி பையப் பைய நடந்து வந்து சிரிப்புக் காட்டி, தம் ... Read More