Tag: புனைவு
40: ஆடுகாய்கள்
ஆட்டம் முடிந்ததும் லீலியா செலினியைக் கவனிப்பற்கென தானகியுடன் சென்றாள். நிலவை எழுந்து நின்று சதுரங்கப் பலகையை நோக்கினாள். இரு அரசிகள் கட்டத்தின் நடுவிலே வீற்றிருந்தார்கள். சுற்றிலும் ஆடுகாய்கள். நீலனுடன் சதுரங்கம் விளையாடுவது நிலவைக்கு சொல்லாடும் ... Read More
39: ஆட்டம்
நிலவையின் மஞ்சத்தறையில் லீலியா உசையை நோக்கியபடி நின்றாள். "நீலா" "நீலா" என மிழற்றினாள் உசை. பச்சையின் எழிலாலான உசையின் சிறகுகளை நோக்கியவள் கூண்டின் வாயிலைத் திறந்து உசையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள். அகலில் ஏந்திய ... Read More
37: சோம வதம்
வெண்மையும் சாம்பலும் கருமையும் மேனியெனக் கொண்ட வானவில் வண்ணங்களும் புள்ளிகளும் நட்சத்திரங்களும் மிகுந்த ஆயிரக்கணக்கான புறாக்கள் பட்டினத்தின் புகைப்பெருக்குக்கு அஞ்சி அரண்மனை முன் முகப்பை அண்டி மிதந்து செட்டைகளைப் படபடவென அடித்துக் கொண்டு மண்ணிறங்கியும் ... Read More
36: அறக்கொடியாள்
யவன மருந்துச் சாறை நெஞ்சில் விரிந்து நீண்டிருந்த சதுப்புப் புண்ணில் ஊற்றிய பின் பச்சை வண்ண அடர்த்தியான நீராவியால் நீலனது மேனியைச் சுற்றிப் பரவினார்கள் யவன மாந்திரிகக் குழுவினர். நீலழகன் தன் மஞ்சத்தில் தலையெழாது ... Read More
35: சூர்விழி
மாயை தன் பலவண்ணக் கூந்தலால் இருளைப் போர்த்தியது. இருள் ஒவ்வொரு வண்ணத்திலும் கலந்து அவ் வண்ணமென ஆகியது. வண்ணங்களால் தன் விழியை இழந்தது இருள். வண்ணங்களால் தன்னை நோக்கியது. தானென அறிந்த ஒன்றை வேறெனக் ... Read More
34: ஏழு அன்னையர்
அழியும் ஒரு துளி அழிவே மீதொரு அழிவின் முதல் துளியாகியது. அழிவில் எஞ்சும் அழியாத ஒன்றே விழைவென உருக்கொண்டது. அது காக்கையெனக் கருஞ்சிறகுகள் விரித்து கூர் கரும் அலகுகள் மின்ன கொழு கரும் விரல்கள் ... Read More
32: யாகுப ரூப
காலம் உறைந்து மீண்டும் கலையும் காலம் எத்துணை எளியது என நோக்குங்கால் ஆடற் சித்தரின் நுதலில் விழியொன்று மெல்லக் கீறி இமைகள் உதித்தன. தீயின் பல்லாயிரம் பல்லாயிரம் மடிப்புகளில் ஓர் அலையின் நுரையில் அதன் ... Read More
31: உலகளந்தோன்
நாகலிங்கப் பூ மரத்திலிருந்து ஒரு மலர் காற்றில் அசைந்து அசைந்து மகவைத் தொடும் அன்னையின் கரமென ஆடற் சித்தரின் வெண்குழலை வருடிக் கொண்டிருந்தது. அகலை நோக்கும் விழியென அப்பூவின் சந்தம் ஆடற் சித்தரை ஊழ்கத்தில் ... Read More