Tag: புனைவு
110: மெய்த்தோழன்
அரண்மனை வாயில் கோபுரத்தில் நின்ற இளம் புலிவீரர்கள் இளமழைக்கு ஒடுங்கி கோபுர அறைகளில் ஒதுங்கியிருந்தனர். மூங்கில் ஏணியால் மேலேறிய தமிழ்ச் செல்வனைக் கண்ட போது பதைபதைத்து தம் இடங்களுக்கு மீண்டு கொண்டிருக்க கையால் சைகை ... Read More
109: அன்னைக்கடல் : 02
ஆழியை விழிகளால் அணைத்தபடியிருந்த இளநீலனின் அருகில் அவனது முதல் தனுசு பாணங்களற்றுத் தனித்திருந்தது. குழல் காற்றில் மெல்ல விசிறும் மழையில் இலைத்தழைப்புகளென ஆடின. இளஞ் செவிகளில் குண்டலங்கள் மொட்டு உலகுகளெனச் சுழன்று கொண்டிருந்தன. இடையாடையை ... Read More
108: அன்னைக்கடல்
மா என்று கடல் இரைந்து அழைத்துத் திரும்பும் ஓராயிரம் ஒலிகளைப் புலரி முதல் கேட்டபடி இளமழையின் சின்னக் காலடிகள் கரைமணலில் நடப்பதை ஓய்வேயில்லாமல் திண்ணையில் சாய்ந்தபடி நோக்கியிருந்தார் நீலனின் அன்னை உமையம்மாள். ஒவ்வொரு மா ... Read More
107: இளமழை விளையாட்டு : 02
சாலினியின் சிறுசெவியை முயலின் காதெனப் பற்றியபடி ஏசிக் கொண்டு அவளைத் திண்ணை நோக்கி இழுத்துச் சென்றாள் இளந்தாய். முதுபெண்டிர் சாலினிக்காகப் பரிந்து பேசினர். அவள் இளையவள். குறும்பினி அவளை விட்டுவிடு எனச் சொல்லி சாலினியின் ... Read More
106: இளமழை விளையாட்டு
நீலனின் பின்னுருவைக் கண்டு அவன் உடலில் எழும் வனப்பை நோக்கிக் கொண்டே சுவடிகையின் சடசடவென வெடிக்கும் வினாக்களுக்கு தலையை அசைத்தபடி சீரான தாள அடிகளுடன் நடந்தாள் நிலவை. இளமழை அனைவரின் மீதும் தழைந்து இறங்கி ... Read More
105: மடப்பெண்ணே : 03
"தாகத்தை அறியவும் கற்கவும் பயிலவும் மேலும் கற்று முற்றறிந்து அமையவும் இயலாதவர் விடாயை அனுபவிக்கவும் தீர்த்துக் கொள்ளவும் நீங்கவும் இயலாது. மானுடர் தங்கள் விழைவுகளின் ஊற்றுமுகங்களை கண்டடைதலே பாதையினைத் தேரும் முதல் நிகழ்வு. அடுத்து ... Read More
104: மடப்பெண்ணே : 02
பெரும் புற்காட்டிடை புலி மறைவதென பொன்னனின் நோக்கிலிருந்து முத்தினி அகல விழியருகில் குவிந்து மிதக்கும் மின்மினிப் பூச்சிகளென ஒளியுவகை கொண்டு எழுந்து நெருங்கி அவனது முகம் நோக்கினாள் செழியை. எப்பொழுதும் பரபரக்கும் செழியையின் விழிகள் ... Read More
103: மடப்பெண்ணே
பொன்னன் மஞ்சத்தில் சரிந்து துயிலில் ஆழ்ந்தான். அவனது இடையாடை உருவி நழுவுவதை அறிந்து எக்கல் வரச் சிரித்துச் சிரித்து அயர்ந்தான். சிலகணங்களில் இருநாவுகள் சண்டையிட்டு இருவாய்களில் ஆண்குறி நுழைந்து ஈரலிப்பில் தடித்துத் துடித்து சித்தத்தின் ... Read More
102: இளமழைத் தூவல்
சுவடிகை வலக்கரத்தின் முழங்கையை இடக்கர விரல்களால் பற்றிக் கொண்டு ஒசிபவள் போல நடந்து வந்ததை தொலைவிலிருந்தே நோக்கினார் வேறுகாடார். அவள் கழுத்தில் தூங்கிய வெள்ளிப் பதக்கம் காரிருட்டில் வெள்ளி நிலவு என மினுங்கியது. மென் ... Read More
101: அரக்கனின் காதல்
சத்தகன் தன் பெருங்கரங்களால் இளம் வீரர்களை தோள்களில் அறைந்து கொண்டு இன்சொற்கள் கூவிக்கொண்டு நலன் விசாரித்தபடி அவர்களை நோக்கி வாழ்க்கையைப் பற்றி ஓரிரு சொற்கள் சொல்லி நடந்து சென்றான். மேகங்கள் எங்கிருந்து எழுந்தவையென நோக்கி ... Read More