Author: Kiri santh

76: களித் தோழியர்

Kiri santh- July 29, 2024

"களிப்பெருக்கையே மானுடர் முதன்மையாக விழைகின்றனர் என்பது பொய் இளம் பாணனே. இங்கு நீ காணுகின்ற ஒவ்வொருவரும் அடையும் களிக்கு அதன் மரக்கிளைகளையும் கனிகளையும் பூக்களையும் இலைகளையும் விட ஆயிரக்கணான துயர்கள் மண்ணினுள் ஆழத்து ஆழங் ... Read More

75: பவனி

Kiri santh- July 28, 2024

அமைச்சர்கள் முன்னிரையில் ஒருங்கியதும் சிறு முரசுகள் மும்முறை எழுந்தணைந்து விம்மின. சூரியன் பொற்தேரில் வந்தமைந்து தழல் முகம் எழுந்தது. ஒவ்வொரு வளைவும் புடைப்பும் சிற்பங்களும் மலர்ச்சரங்களும் ஒளித்தழல் சூடின. சூர்ப்பனகர் செருமியபோது தமிழ்ச்செல்வன் குனிந்து ... Read More

74: அணியறை : 02

Kiri santh- July 27, 2024

பேராடி அதிகனவெனத் தன்னைத் தான் விரித்துக் கொள்ளும் மாதோகையில் வண்ணங்களினாலும் மினுக்குகளாலும் சூழ்ந்தெழுந்திருந்தது. பதும்மை நோக்கிழக்காமல் உற்று நிற்பதை அடியாழத்தில் ஓர் பனிப்புல்லின் நுனித்தீண்டலென உணர்ந்தாள் விருபாசிகை. நலுங்கியவளின் முகம் சிரித்து உருகுவது போல் ... Read More

73: அணியறை

Kiri santh- July 26, 2024

தேர்ச்சில் கழல்வது போல் உருண்டு ஆழியின் மேலே தங்கக் கனியெனத் தனக்குள் தான் உருகிக் கொண்டிருந்தது பரிதி. கடற் பறவைகள் கூட்டமாக ஒலியெழுப்பிக் கொண்டு கரை நண்டுகளைக் கொத்திப் பறந்து கொண்டிருந்தன. மேகங்களில் பரிதி ... Read More

72: மலைமேல் பனி : 02

Kiri santh- July 25, 2024

"நீர்க்குமிழியின் காற்றை வெளியிருக்கும் காற்று வந்து தொட்டுத் திறப்பது எங்கென அறியாமுடியாததைப் போல் முதுவிறலியின் சொற்கள் எனது அகத்திற்குள் நுழைந்தன. அவரின் சொற்கள் காதலின் நீர்மையின் பலவடிவ பேதங்களை உருமாற்றி உருமாற்றி உண்டாக்கின. நெருப்பில் ... Read More

71: மலைமேல் பனி

Kiri santh- July 24, 2024

ஒருவரை ஒருவர் முழுதுள்ளத்தால் ஒருமுறையாவது முழுதுவெறுக்காத காதலர்கள் புடவியில் இல்லை என எண்ணிக் கொண்டான் மாதுளன். எல்லாக் காதலின் விதையிலும் எதனாலோ தீர்மானிக்கப்பட்ட ஒருதுமிக் கசப்பும் அளிக்கப்படுவது காதல்நெறியென யாரோ குடிமயக்கில் சிற்பக் கூடத்தில் ... Read More

70: நிலவறை

Kiri santh- July 23, 2024

மதுச்சாலையின் மேற்தளத்தில் எருவீரன் முழுமயக்கில் வயிறுபிரட்டிக் கிடக்கும் முதலை போல் புரண்டு கிடந்தான். விழவின் களியில் மதியம் தொடக்கம் இடைவிடாது மதுவருந்தும் போட்டியில் கீர்த்த மந்திரரும் அவனும் சளைக்காது மூநாழிகை குவளை குவளையாய் யவன ... Read More

69: எட்டுத்திக்கும்

Kiri santh- July 22, 2024

நிலவை முன்முகப்பிற்கு வந்து நின்று சடங்கு நிலைகளை நோக்கினாள். பொற்தேரினைச் சுற்றி ஆயிரக்கணக்கான சிறு புட்கள் பறப்பன போல் பணியாட்களும் காவலர்களும் முதுசிற்பிகளும் படைவீரர்களும் அரண்மனைப் பெண்டிரும் இடத்திற்கு இடம் தாவிக் கொண்டிருந்தனர். வானில் ... Read More

68: மங்காத கருமை

Kiri santh- July 21, 2024

"மானுடரில் உறையும் அசுரத்தனத்தை விடுவிப்பதென்பது பெண்ணை விடுவிப்பதாலேயே நிகழும் இளம் பாணனே. பெண்ணின் வேட்கையாலேயே புடவி இல்லமென மானுடருக்கு அமைந்தது. ஆடவர் அனைவரும் அவளின் எளிய பணியாட்கள். தன்னை ஆள்பவரை அஞ்சாத பணியாள் எவர். ... Read More

67: அம்பலம்

Kiri santh- July 20, 2024

நூற்றுக்கணக்கான மரங்கொத்திகள் கொத்தி அறைவதைப் போல் அம்பலத்திலிருந்த தச்சர்களின் மரவுளிகள் ஒலியெழுப்பின. கீழும் மேலும் நீர்க்கலயங்களிலிருந்து புழுதியணைக்கும் பணி இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. ஈரம் ஊறித் ததும்பும் தாமரை இலை போல் ஆடியது நிலம். ... Read More