Tag: குறுந்தொகை

உண்ட என் நலன்

Kiri santh- May 18, 2024

காட்டின் கரையில் உள்ள விளையாட்டுக் களத்தில் யானைகள் உலவுகின்றன. மரங்களை முட்டிக் கிளைகளை இழுத்து மலர்களையும் கனிகளையும் கொய்கின்றன. மழை பெய்த சேற்று மண்ணில் அவை அழுந்திப் பதிக்கும் பாதங்களில் சேற்று நீர் நிறைகின்றது. ... Read More

நறுந்தூபத்தின் புகைக்கயிறு

Kiri santh- May 17, 2024

பாலையின் கோடி கோடி மணற்துகள்களும் ஒரு நாளின் பிரிவின் அணுக்கள் எனச் சூழ்ந்திருக்கிறது. இறுக்க மூடிய விழிகள் வெளிச்சத்தில் திறந்து கொள்ளும் போது புள்ளிப் புள்ளியாய் தோன்றும் பொட்டுகள் மெய்யை ஒருகணம் கலங்கித் தெளிய ... Read More

கார்காலமில்லை

Kiri santh- May 15, 2024

தோழி! இது தலைவன் வருவேன் எனச் சொல்லிய கார்காலமில்லை. அதோ பார் பிடவம் மலர்கள் அவிழ்ந்திருக்கின்றன. முன் கார்காலத்தின் மழையிது. மேகங்கள் இனி வரப்போகின்ற மழைக்காலத்திற்காகத் தங்கள் சட்டைகளைப் பிழிந்து உதறிப் போட்டபடி ஆகாயக் ... Read More

குறிஞ்சியின் தலைவி

Kiri santh- May 11, 2024

குறுந்தொகையின் காட்சிகளுக்குள் நேரே சென்று வைத்துவிடக்கூடிய அனாரின் கவிதையிது. குறுந்தொகைக் கவிதைகளுக்குச் சில பின்னணிக் காட்சிகளை எழுதி அவற்றை அதனோடு பொருத்தி வாசிக்கும் முறையையே எழுதி வருகிறேன். அதில் நவீன கவிதைகள் சங்ககாலக் கவிதைகளைச் ... Read More

என் தனிமை யானே

Kiri santh- May 10, 2024

அதுவொரு முன்பனிக் காலத்து நள்ளிரவு, உலகு ஒரு நீர்த்திரையென ஆகி ஆகாயத்தின் தாழ்கள் திறந்து கொண்டு பெருமழை துள்ளிக் குதித்து மண்ணிறங்குகிறது. அதிர்ந்து அதிர்ந்து இதயம் நோகுமளவுக்கு இடி கொட்டுகிறது. மின்னல்கள் நீள்முடி கொண்டவளின் ... Read More

சுகந்தமும் வியர்வையும்

Kiri santh- May 8, 2024

எப்பொழுதாவது பனிக்கட்டி வலுவுடன் நீர்க்கல் பெருக்கென இம்மண்ணில் மழை விழுவதுண்டு. அம்மழை எந்த இடைவெளியிலும் கோடை வெளிவரக் காத்திருக்கும் புழுக்கத்தின் மேல் குளிர்க்கால்களால் நடந்து இவ்வெளியை ஈரம் பரவவிடும். வெண்ணொளிச் சாளரமென வானத்தைத் திறந்து ... Read More

மணி மருள் பூ

Kiri santh- May 7, 2024

காத்திருப்பின் மென்னொலிக்கு அதிராத காதலுள்ளங்கள் உண்டா!கொல்லன் அழிசியின் இக்கவிதையில் கருநொச்சி விழும் ஓசை கேட்குமளவுக்கு உள்ளம் தன் அனைத்துப் புலன்களையும் காதுகளக்கிக் கொண்டு விழித்திருக்கும் தவிப்பில் எழுவது எது! கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே,எம் ... Read More

சூடுதல்

Kiri santh- May 6, 2024

முன்னொருநாள் ஒரு தெருக்கூத்திற்காக மாணவர்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன். எனது மாணவியொருத்தி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த உடைந்த கற்தூணில் அமர்ந்திருந்தாள். என்ன பிரச்சனை என்று கேட்டேன். இல்லை சேர், எனக்கு என்ர ... Read More

துளித்தீகள்

Kiri santh- May 5, 2024

ஒரு காட்சித் துண்டு கவிதையென ஆவதுண்டு. காண்பதை வேறொரு உச்சியில் அறியும் அகக் கண்கள் உள்ளவர்களே கவிஞர்கள். மடலூர் கிழாரின் கவிதையொன்றை வாசித்த பொழுது மனதுள் எழுந்த துண்டுப் பரவசம் இன்னொரு சொல்லில் எழ ... Read More

வேலன் வெறியாட்டு

Kiri santh- May 4, 2024

அப்பாவுக்குச் சாமி நம்பிக்கை அளவுக்கு அதிகம். சாமிகளே அஞ்சி ஒளியுமளவுக்குப் புதிய புதிய சாமிகளைத் தேடி ஓடியபடியே இருப்பார். பிரிந்தாவைக் காதலித்ததை அறிந்த பின் இரண்டு விநோதமான சாமியாடிகளிடம் அழைத்துச் சென்றார். ஒன்று வவுனியாவில் ... Read More