Tag: புனைவு
70: நிலவறை
மதுச்சாலையின் மேற்தளத்தில் எருவீரன் முழுமயக்கில் வயிறுபிரட்டிக் கிடக்கும் முதலை போல் புரண்டு கிடந்தான். விழவின் களியில் மதியம் தொடக்கம் இடைவிடாது மதுவருந்தும் போட்டியில் கீர்த்த மந்திரரும் அவனும் சளைக்காது மூநாழிகை குவளை குவளையாய் யவன ... Read More
69: எட்டுத்திக்கும்
நிலவை முன்முகப்பிற்கு வந்து நின்று சடங்கு நிலைகளை நோக்கினாள். பொற்தேரினைச் சுற்றி ஆயிரக்கணக்கான சிறு புட்கள் பறப்பன போல் பணியாட்களும் காவலர்களும் முதுசிற்பிகளும் படைவீரர்களும் அரண்மனைப் பெண்டிரும் இடத்திற்கு இடம் தாவிக் கொண்டிருந்தனர். வானில் ... Read More
68: மங்காத கருமை
"மானுடரில் உறையும் அசுரத்தனத்தை விடுவிப்பதென்பது பெண்ணை விடுவிப்பதாலேயே நிகழும் இளம் பாணனே. பெண்ணின் வேட்கையாலேயே புடவி இல்லமென மானுடருக்கு அமைந்தது. ஆடவர் அனைவரும் அவளின் எளிய பணியாட்கள். தன்னை ஆள்பவரை அஞ்சாத பணியாள் எவர். ... Read More
67: அம்பலம்
நூற்றுக்கணக்கான மரங்கொத்திகள் கொத்தி அறைவதைப் போல் அம்பலத்திலிருந்த தச்சர்களின் மரவுளிகள் ஒலியெழுப்பின. கீழும் மேலும் நீர்க்கலயங்களிலிருந்து புழுதியணைக்கும் பணி இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. ஈரம் ஊறித் ததும்பும் தாமரை இலை போல் ஆடியது நிலம். ... Read More
66: பொற்தேர்
"ஐயமே அழகையும் அறிவையும் பெருமலையேறியின் காலில் சிறுகூழாங்கல்லென இடறி வீழ்த்துகிறது பொன்னா. இப்பொற் தேர் ஆயிரம் நுண்விழிகளால் பெருங் காலங்களில் கூடும் நுண்முனை அகங்களால் மேலும் நுணுக்கப்பட்டு இங்கு இங்கனம் ஆகிநிற்கிறது. மானுடர் ஆக்கிய ... Read More
65: பரிச்சடங்கு
அரண்மனையின் புரவிக் கொட்டிலில் கனைப்புகளின் ஒலிகள் ஆரவாரமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான காவல் வீரர்கள் நுணுகி நுணுகி நோக்கிப் புரவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். சூரியனின் செம்பொன் ஒளி புரவிக்கொட்டிலின் இடைகளின் ஊடாக வெள்ளப் பீறெலென ... Read More
64: நினைவாலயம் : 02
இடையிலிருந்த விண்யாழியை நீள்மரப்பெட்டியில் அமர்ந்திருந்த ஆடற் சித்தரின் முன் ஆற்றில் உள்ளங்கை நீரை ஊற்றுபவள் போல இறக்கி விட்டாள் தூமழை. விண்யாழியின் வாயில் நுரை கசிந்து கைவிரல்களில் எச்சில் வடிந்திருந்தது. மூக்குநீர் ஊறி வாயில் ... Read More
63: நினைவாலயம்
காவற் தகடுகள் வனவிலங்குகளிடம் கையளிக்கப்பட்டு சடங்குகளை முடித்த பின்னர் மேனியால் வழியும் வியர்வையூற்றைக் காற்றில் நனைந்து கொட்ட விட்டுவிட்டு பெருமரங்களினது நிழல்வழிச் சாலையில் குடிகளின் நிரைகளினூடாக நாகதேவி கோவிலை நோக்கிக் காவற்படையினருடன் நடந்து சென்று ... Read More
62: புரவி அரசன் : 02
உயம்பவின் விழிகளில் மினுங்கிய சினம் செங்கருவிழிகளென அழல் கொண்டிருந்தது. லாமக தன் பொற்சிறகுகளை அம்புச் சிதறலென உலுப்பி உயம்பவை நோக்கிச் சொல்லற்று நின்றது. உயம்ப மெல்லக் கனைத்து அமர்ந்தபடியே குரலை நாணேற்றியது போல் பேசத் ... Read More
61: புரவி அரசன்
அசல பெருங்கூம்பு மலையெனக் கண் முன் எழுந்து நின்ற சர்க்கரீஸ் கூடத்தை நோக்கி நின்றான். சுபல நிரந்தரமானது என்பது போன்ற அவனது திறந்த வாயுடன் கூம்பின் ஓவியங்களையும் அதில் வரையப்பட்டிருந்த அதிசய உயிரிகளையும் கண்கொட்டாமல் ... Read More