Tag: புனைவு

50: திசையிலான்

Kiri santh- July 3, 2024

பட்டினத்தின் முகவாயில் கடந்த பெருங்கூட்டமொன்றிற்கிடையில் இரு கருங்காளைகள் பூட்டிய வண்டிலில் சிகை காற்றில் தீவிலகலெனப் பறக்கக் கொற்றன் எழுந்து நின்றான். விசும்பிடை உதித்துக் கதிரினைச் சூடி மண்ணளையும் சிறுகுழவியென அந்தரத்தை ஆட்டிடும் ஆதவன் மைந்தனென ... Read More

49: ஆடி மயில்

Kiri santh- July 2, 2024

திருதிகா தோழிகளுடன் மாற்றுடை அணிந்து தன்னைக் குடிகள் அறியாத வண்ணம் உருமாற்றிக் கொண்டாள். மன்றுக்குச் செல்லும் பெருவீதியால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வண்ண பேதங்களை நோக்கிக் களிச்சிரிப்பாடினர்கள் தோழியர். திருதிகா ஒவ்வொன்றையும் தொட்டு ... Read More

48: புரவிக் கால்

Kiri santh- July 1, 2024

மகாசேனன் கருநிறப் புரவியின் குளம்படிகள் மண்ணை உந்தி விசை கொண்டு கடற்கரையின் வெண்மணலை உழுது செல்லுவதை நோக்கியபடி கடிவாளத்தைப் பற்றியிருந்தான். இளஞ் சூரியன் கடலிலிருந்து எழுந்து பொன் நாணயமென உயர்ந்து கொண்டிருந்தான். காகங்கள் கரைந்து ... Read More

47: மாகதா : 02

Kiri santh- June 30, 2024

மடாலயத்தில் உணவு சமைக்கும் வாசனை எழுந்து புகையின் இன்மணம் காற்றில் வீசிக் கொண்டிருந்தது. மாகதா இளம் பாணனின் மெல்லுடலை நோக்கியபடியிருந்தார். அவனுள் சுழிக்கும் உடலசைவுகள் நிரந்தரம் என்பது போல் தோன்றியது. இளையவர்களிடம் தோன்றும் மிதப்பிற்கும் ... Read More

46: மாகதா

Kiri santh- June 29, 2024

"உங்கள் சொற்கள் எதன் பொருட்டு எழும் பாணரே" என அமைதியில் எழும் நதியலையென ஒலித்த குரலில் கேட்டார் மகாசோதி. நீண்டு தடித்த பேரரச மரத்தில் நலுங்கிக் கொண்ட ஆயிரமாயிரம் இலைகளின் தளும்பல்களின் கீழ் பனையோலையால் ... Read More

45: சிம்ம நிழல்

Kiri santh- June 28, 2024

நெடிய மூங்கில் கழிகளால் தூணிடப்பட்டு பழுத்த பனையோலைகளால் சீராகக் கூரையிடப்பட்ட சத்திரமொன்றில் இளவெயில் தன் ஒளிக்கரங்களை நீட்டியிருந்தது. இடையிலிருந்த சாளரங்களால் சிறு ஒளித்தூண்கள் சத்திரத்தின் உள்ளே விழுந்து கொண்டிருந்தன. வீதியில் பெருகிய குடிகளின் காலடிகளால் ... Read More

44: ஓயா மழை : 02

Kiri santh- June 27, 2024

"மழைப் பொழிவு இருட்டில் வைரத் துளிகளென எங்கள் மீது கொட்டிக் கொண்டிருந்தது. மேனி மயங்கிக் கிடந்த என்னைத் தன்னிரு கரங்களில் இளங் கன்றை ஏந்துவது போல் தூக்கிக் கொண்டார். கருவறையின் முன்முக மண்டபத்தில் சில ... Read More

43: ஓயா மழை

Kiri santh- June 26, 2024

காலை பரபரவென விடிந்து கொண்டிருப்பதை அங்கினி நோக்கியபடி உவகையில் முகம் விரிய நின்றாள். விழவுக் காலங்களில் உளம் கசப்பை அடைய முயலும் போதெல்லாம் தேன்வழுகும் பாறையில் நிற்கும் தேரையெனத் தன்னை உணர்வாள். வழுக்கிச் சென்று ... Read More

42: இருட் குழவிகள் : 02

Kiri santh- June 25, 2024

"மானுடர் தம் சொந்த நிழல்களைச் சந்தேகிப்பவர்கள் கூத்தரே. இளமையில் நாம் எண்ணும் கனவுகள் மெய்போலத் தோன்றுபவை. அணுகும் தோறும் காதல் கொண்ட பெண் காதலைப் பூரணம் என எண்ணுவதைப் போல் தோற்றமளிப்பவை. அவை நீடிக்கும் ... Read More

41: இருட் குழவிகள்

Kiri santh- June 24, 2024

பேரொளியே நீ இருட்டின் குழவிமேதமையே நீ பித்தின் குழவிஅழிகலன்களே நீங்கள் மானுடரின் குழவிகள்அழியாத இருட்டே நீ வாழ்கஉன்னை வணங்குகிறோம்எங்களை விட்டு அகலாதிருகருமையே நீயே பேரழகுஇருள் கிரணங்களே நீங்களே எங் கரங்கள்இருளே விழியாகுக இருளே வழியாகுகஇருளே ... Read More