Tag: புனைவு
93: குருதி வேலன்
முன்முகப்பின் மேற்கூரையின் மேல் ஆயிரக்கணக்கான புறாக்கள் குறுகுறுத்துக் கொண்டிருக்குமொலிகள் பாதத்தில் ஆற்றங் கரை மணல்கள் உருள்வது போலத் தோன்றியது சுவடிகைக்கு. அவளது ஒளிக்கூச்சலிடும் விழிகளை அசைத்து புறாக்களின் குதுகுதுப்பான மேனிகளை நோக்கினாள். ஒவ்வொன்றும் பருத்தவை ... Read More
92: மணநாள்
பனிக்காற்று முன்முகப்பின் கருங்கல் வளைவுகளில் தாவியார்த்து மேவியது. அரண்மனையின் காவல் கோபுரங்களில் தீப்பந்தங்கள் நாவடக்கத் தொடங்கின. சத்தகனை நோக்கியபடியே "என்னவென்பதை அறிக இளையோனே. அவள் உன் களித்தோழியென உடனிருக்க வேண்டுமென என் அகத்தில் வண்டொன்று ... Read More
91: குழவி நாகங்கள்
உசை "நீலா நீலா" என மிழற்றிக் கீச்சிய போது தானகி விழித்துக் கொண்டாள். நிலவையின் இடையில் அணைத்துக் கிடந்த தனது கைகளை மெல்லிய நடுக்குடன் விலக்கிக் கொண்டாள். நிலவை வேலெறிய ஓடுபவள் போல துயிலமைவிலிருந்தாள். ... Read More
90: சுவடிகை
கண் மடல்கள் நீரலை போல அமைந்தெழ நிலவையின் மஞ்சத்தில் லீலியா துயிலில் இருந்தாள். தானகி நிலவையைச் சேய் போல அணைத்துக் கொண்டு துயின்றிருந்தாள். தென்னகத்திலிருந்து வந்த பெண் மொழிபெயர்ப்பாளினி சுவடிகை இருக்கை மஞ்சமொன்றில் தலையணையைப் ... Read More
89: களியிலாடு மயில்
அருள்வதும் மருள்வதும் பெண்ணின் இயற்கை. வளர்வதும் பொலிவதும் போல. தானகி தன் நினைவுகளின் இனிமைகள் அனைத்தும் நிலவையின் உடனிருத்தலில் எங்கனம் பூத்து மகிழ்ந்தன என எண்ணிக் கொண்டாள். அரசியினருகில் துயிலும் தோழியென்றாகி வாழ்பவள். சொல்லிலும் ... Read More
88: இச்சை அகம் : 02
ககனம் கருநீலப் பொருளின்மையெனத் தோன்றியது. பொன்னன் தன் மூச்சை ஆழ இழுத்துக் கொண்டு "சொல்லாடுவதும் ஒருவரை முற்றறிந்த பின்னரும் கூடுவதும் எப்படி மெய்மை அறிந்ததென்று ஆகும். ஒருவர் சொற்களில் தன் மெய்மையைத் தான் வெளிப்படுத்துகிறார் ... Read More
87: இச்சை அகம்
காலமென்பது நிற்காத பெருஞ்சுழலில் சிந்தப்படும் ஒற்றைப் பெருமழை. அதில் வீழ்பவரோ வெல்லப்படுபவரோ வஞ்சம் கொண்டவரோ பழிசுமந்தவரோ கொடூரரோ மேன்மையானவரோ நல்லதோ கெட்டதோ ஞானமோ அஞ்னானமோ தவமோ பற்றோ மாபெருங் காவியமோ கீழ்மையின் பிறவிகளோ அனைத்தும் ... Read More
85: நஞ்சு மழை
முதல் நாளிரவின் மயக்கிசையும் உடுக்கிசையும் அகத்தில் தாளமிட்டு எழுந்து கூச்சல் கொள்வது போல் தோன்ற விழித்துக் கொள்ளவென இமைகளை அசைத்த போது அவை காந்துவன போன்று விரிய மறுத்தன. சிற்பன் உதடுகளில் உலர்ந்திருக்கும் காய்ச்சலை ... Read More
84: பெருவூஞ்சல்
மடாலயத்தின் பொன்வேய் கூரையின் மேல் புறாக்கள் சூரியச் சிறகுகள் பூண்டவை போல் ஒளியில் மினுங்கிக் காற்றில் எத்திக் குறுகுறுத்துக் கொண்டிருந்தன. புலரியின் பனிக்காற்று அல்லிக் குளத்தின் மேல் கவிந்து குளிரிலைகளை அலைத்தது. மாகதா ஊழ்க ... Read More

