Tag: புனைவு
53: ஐம்புதல்வர்
"எண்ணுந் தோறும் நழுவும் ஒன்று கலையில் அமைந்திருக்கிறது இளையவரே. ஆன்மீகத்திலும் அவ்வண்ணமே. ஞானம் அடைய எண்ணியிருப்பதும் கூட ஒரு தடையாக அமையலாம். வழிகள் பிரிந்து ஆயிரம் திரிகளாய் ஞானப் பாதை சுடர்களுக்காகக் காத்திருக்கிறது. ஒவ்வொரு ... Read More
52: திசையிலான்: 03
அனல் முகத்தோன் வீற்றிருந்த ககனத்தின் கீழ் நத்தையலைகள் அடித்த சிறுகடலிலிருந்து கொற்றனின் இருகால் பிடித்துக் களிமணலால் இழுத்துச் சென்றார் கம்பளி வைரவச் சித்தர். அவன் மூர்ச்சையடைந்து தேகம் சுவாசத்தின் கலமென மட்டுமே எஞ்ச அவரிழுப்புக்குப் ... Read More
51: திசையிலான்: 02
கிழக்கின் கீழ்த்திசையில் கழலில் குலுங்கும் சிலம்புடன் உவகையின் நடுக்குடன் ஒரு கழல் மணலின் கன்னம் பிளந்து செதுக்கப்பட்டிருந்தது. கொற்றன் தன் விழிகளால் துழாவி அக்கால் ஒரு பெண்ணினுடையதெனக் கண்டான். கழல் நெளிவில் அமைந்த மயக்கை ... Read More
50: திசையிலான்
பட்டினத்தின் முகவாயில் கடந்த பெருங்கூட்டமொன்றிற்கிடையில் இரு கருங்காளைகள் பூட்டிய வண்டிலில் சிகை காற்றில் தீவிலகலெனப் பறக்கக் கொற்றன் எழுந்து நின்றான். விசும்பிடை உதித்துக் கதிரினைச் சூடி மண்ணளையும் சிறுகுழவியென அந்தரத்தை ஆட்டிடும் ஆதவன் மைந்தனென ... Read More
49: ஆடி மயில்
திருதிகா தோழிகளுடன் மாற்றுடை அணிந்து தன்னைக் குடிகள் அறியாத வண்ணம் உருமாற்றிக் கொண்டாள். மன்றுக்குச் செல்லும் பெருவீதியால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வண்ண பேதங்களை நோக்கிக் களிச்சிரிப்பாடினர்கள் தோழியர். திருதிகா ஒவ்வொன்றையும் தொட்டு ... Read More
48: புரவிக் கால்
மகாசேனன் கருநிறப் புரவியின் குளம்படிகள் மண்ணை உந்தி விசை கொண்டு கடற்கரையின் வெண்மணலை உழுது செல்லுவதை நோக்கியபடி கடிவாளத்தைப் பற்றியிருந்தான். இளஞ் சூரியன் கடலிலிருந்து எழுந்து பொன் நாணயமென உயர்ந்து கொண்டிருந்தான். காகங்கள் கரைந்து ... Read More
47: மாகதா : 02
மடாலயத்தில் உணவு சமைக்கும் வாசனை எழுந்து புகையின் இன்மணம் காற்றில் வீசிக் கொண்டிருந்தது. மாகதா இளம் பாணனின் மெல்லுடலை நோக்கியபடியிருந்தார். அவனுள் சுழிக்கும் உடலசைவுகள் நிரந்தரம் என்பது போல் தோன்றியது. இளையவர்களிடம் தோன்றும் மிதப்பிற்கும் ... Read More
45: சிம்ம நிழல்
நெடிய மூங்கில் கழிகளால் தூணிடப்பட்டு பழுத்த பனையோலைகளால் சீராகக் கூரையிடப்பட்ட சத்திரமொன்றில் இளவெயில் தன் ஒளிக்கரங்களை நீட்டியிருந்தது. இடையிலிருந்த சாளரங்களால் சிறு ஒளித்தூண்கள் சத்திரத்தின் உள்ளே விழுந்து கொண்டிருந்தன. வீதியில் பெருகிய குடிகளின் காலடிகளால் ... Read More
44: ஓயா மழை : 02
"மழைப் பொழிவு இருட்டில் வைரத் துளிகளென எங்கள் மீது கொட்டிக் கொண்டிருந்தது. மேனி மயங்கிக் கிடந்த என்னைத் தன்னிரு கரங்களில் இளங் கன்றை ஏந்துவது போல் தூக்கிக் கொண்டார். கருவறையின் முன்முக மண்டபத்தில் சில ... Read More

