Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Month: July 2024

68: மங்காத கருமை

Posted on July 21, 2024

“மானுடரில் உறையும் அசுரத்தனத்தை விடுவிப்பதென்பது பெண்ணை விடுவிப்பதாலேயே நிகழும் இளம் பாணனே. பெண்ணின் வேட்கையாலேயே புடவி இல்லமென மானுடருக்கு அமைந்தது. ஆடவர் அனைவரும் அவளின் எளிய பணியாட்கள். தன்னை ஆள்பவரை அஞ்சாத பணியாள் எவர். ஆகவே பெண் குடிநெறிகளால் சிறையிடப்பட்டாள். நெறியே அவளின் முதற்…

67: அம்பலம்

Posted on July 20, 2024

நூற்றுக்கணக்கான மரங்கொத்திகள் கொத்தி அறைவதைப் போல் அம்பலத்திலிருந்த தச்சர்களின் மரவுளிகள் ஒலியெழுப்பின. கீழும் மேலும் நீர்க்கலயங்களிலிருந்து புழுதியணைக்கும் பணி இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. ஈரம் ஊறித் ததும்பும் தாமரை இலை போல் ஆடியது நிலம். லட்சம் பேர் சுற்றியமர்ந்து நோக்கும் வண்ணம் மா அம்பலம்…

66: பொற்தேர்

Posted on July 19, 2024

“ஐயமே அழகையும் அறிவையும் பெருமலையேறியின் காலில் சிறுகூழாங்கல்லென இடறி வீழ்த்துகிறது பொன்னா. இப்பொற் தேர் ஆயிரம் நுண்விழிகளால் பெருங் காலங்களில் கூடும் நுண்முனை அகங்களால் மேலும் நுணுக்கப்பட்டு இங்கு இங்கனம் ஆகிநிற்கிறது. மானுடர் ஆக்கிய அனைத்துக் கனவுகளும் இப்பொற் தேரைப் போன்றதே. எளிய உளமொன்றிற்கு…

65: பரிச்சடங்கு

Posted on July 18, 2024

அரண்மனையின் புரவிக் கொட்டிலில் கனைப்புகளின் ஒலிகள் ஆரவாரமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான காவல் வீரர்கள் நுணுகி நுணுகி நோக்கிப் புரவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். சூரியனின் செம்பொன் ஒளி புரவிக்கொட்டிலின் இடைகளின் ஊடாக வெள்ளப் பீறெலென வழிந்து கொண்டிருந்து. இருநாழிகையில் பரிச்சடங்கிற்கான பணிகளை ஒருக்கி முடித்தாக…

64: நினைவாலயம் : 02

Posted on July 17, 2024

இடையிலிருந்த விண்யாழியை நீள்மரப்பெட்டியில் அமர்ந்திருந்த ஆடற் சித்தரின் முன் ஆற்றில் உள்ளங்கை நீரை ஊற்றுபவள் போல இறக்கி விட்டாள் தூமழை. விண்யாழியின் வாயில் நுரை கசிந்து கைவிரல்களில் எச்சில் வடிந்திருந்தது. மூக்குநீர் ஊறி வாயில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிக்குப் படிந்தது போல் புழுதி விண்யாழியின் கேசத்தில்…

63: நினைவாலயம்

Posted on July 16, 2024

காவற் தகடுகள் வனவிலங்குகளிடம் கையளிக்கப்பட்டு சடங்குகளை முடித்த பின்னர் மேனியால் வழியும் வியர்வையூற்றைக் காற்றில் நனைந்து கொட்ட விட்டுவிட்டு பெருமரங்களினது நிழல்வழிச் சாலையில் குடிகளின் நிரைகளினூடாக நாகதேவி கோவிலை நோக்கிக் காவற்படையினருடன் நடந்து சென்று கொண்டிருந்தார் ஆடற் சித்தர். அந்தியில் நிகழவிருக்கும் சிற்பனின் ஆடலுக்கான…

62: புரவி அரசன் : 02

Posted on July 15, 2024

உயம்பவின் விழிகளில் மினுங்கிய சினம் செங்கருவிழிகளென அழல் கொண்டிருந்தது. லாமக தன் பொற்சிறகுகளை அம்புச் சிதறலென உலுப்பி உயம்பவை நோக்கிச் சொல்லற்று நின்றது. உயம்ப மெல்லக் கனைத்து அமர்ந்தபடியே குரலை நாணேற்றியது போல் பேசத் தொடங்கியது. “விண்புரவி அரசரே. இன்றுடன் உங்கள் ஆதிக்கம் முடிவடைய…

61: புரவி அரசன்

Posted on July 14, 2024

அசல பெருங்கூம்பு மலையெனக் கண் முன் எழுந்து நின்ற சர்க்கரீஸ் கூடத்தை நோக்கி நின்றான். சுபல நிரந்தரமானது என்பது போன்ற அவனது திறந்த வாயுடன் கூம்பின் ஓவியங்களையும் அதில் வரையப்பட்டிருந்த அதிசய உயிரிகளையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். விக்கிரம அங்கே எருமைகளின் தினவுடன் சுற்றிச்…

60: பாடு மீன்கள்

Posted on July 13, 2024

அறியாத போது சிந்தும் கண்ணீர் ஆயிரம் மடங்கு சிறகுகள் கொண்டவை. அவை மேனியை மிதத்தி அகத்தை உருக்கி திரவச்சிறகுகள் பூண்கின்றன. காலில்லாக் கண்ணீர் கன்னத்தில் நடக்கின்றது. விழியில்லா அந் நீர் விழிமயக்கு அளிக்கிறது. கண்ணீரின் மொழி ஒற்றைச் சொல்லால் ஆனது. அச்சொல் வைரத்தின் பட்டைகளெனத்…

59: காய விழைஞன் : 02

Posted on July 12, 2024

பித்தர் விழிதிறந்து நோக்கிய போது சலனமற்ற நீர்ப்பரப்பில் ஓடும் ஒளிச்சில்லுகளைக் கண்டேன். சினமென அமைந்த உவகை அவரிடம் சுவறியிருந்தது. பெண்கள் கூந்தலில் நறுமணமென எண்ணிக் கொண்டேன். அலைந்து அலைந்து என் அகம் அவரைக் கண்ட பின்னர் அடங்கியிருந்தது. நோயில் காறிய கடைசி எச்சிலென என்…

Posts pagination

Previous 1 2 3 4 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,999)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,889)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme