மூதன்னையின் இரண்டாம் தொடுகை

என் மூன்று ஆசிரியர்களின் ஆசி பெற்ற அந்த நாள் வியாச குரு பூர்ணிமா என அடுத்த நாள் யதார்த்தன் மெசேஜ் அனுப்பியிருந்தார். ஒவ்வொரு வருடமும் வரும் வைகாசி முழு நிலவு நாளை வியாசரின் பிறந்த நாளாக, குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் வெண்முரசு நிறைவடைந்த பின்னர் ஆண்டு தோறும் வெண்முரசு நாளாகாவும் அது கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய ஒரு நாளில் இத்தனை ஆசிகள் கிடைத்திருப்பது முதலில் மகிழ்ச்சியாகவும் இப்பொழுது பொறுப்பாகவும் …

மூன்று ஆசிரியர்கள்

இந்த நாள் போல ஒன்று எனக்குத் திரும்ப நிகழ முடியாது என்று தோன்றுகிறது. அரிதாகவே தன் கல்லுதட்டை இளக்கும் ஒரு தெய்வம் என்னைத் திரும்பிக் கூர்ந்து பார்த்துப் புன்னகைத்தது போல ஒரு நாள். காலையில் எழுந்த போது வட்ஸ் அப்பில் தர்மு பிரசாத் ஒரு லின்கை அனுப்பியிருந்தார். ஜெயமோகன் தளத்தில் என்னைப் பற்றிய தமிழ் விக்கி குறிப்பை பகிர்ந்திருந்தார். ‘கிரிசாந்’ என்கிற பிரகிருதி தமிழ் இலக்கிய உலகில் வாழ்கிறான் என …

ஒளியுள்ள இருட்டு – 2

2 அவனுடைய ஒளிப்படங்கள் 2018 இற்குப் பின் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தன. அவனும் தொடர்ந்து பயணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் அதிகமும் பிரயாணி அல்ல. மெல்ல அப்போது தான் செல்லத் தொடங்கியிருந்தான். முதலில் பண்ணைக் கடற்கரைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் படங்களை எடுப்பான். பிறகு நெடுந்தீவுக்குச் சென்றான். பின்னர் கிளிநொச்சி. கட்டை சில காலம் மல்லாவியில் பிரிந்தாவின் வீட்டில் நின்றான். அங்கு பிரிந்தாவின் அண்ணாவின் போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்தான். …

ஒளியுள்ள இருட்டு – 1

1 எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் மரணம் குறித்து பலரும் கேட்டபடி இருக்கின்றனர். இதை எழுதத் தொடங்குவதற்கு முன்னர் நான்கைந்து குறிப்புகளை மனதில் எழுதி எழுதிக் கரைத்துக் கொண்டிருந்தேன். கடந்த ஐந்து நாட்களில் ஒரு கொஞ்ச நேரம் கூட எழுத நேரம் வாய்க்கவில்லை. ஆனால் அவனையும் அவன் மரணத்தையும் சொல்லியும் எழுதியும் அளிக்க வேண்டியிருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரசாந்தின் இடக்காலின் முழங்காலிற்கு கீழ் உள்ள …

கடைசிச் சில்லறையையும் செலவழித்தல்

ஓர் எழுத்தாளனாக உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும்? நான் எழுத்தாளனின்றிப் பிறிதொன்றில்லை என அகமுணர்தல் ஏன்? என சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். ஒரு நாளை எப்படி ஆக்கிக் கொள்கிறேன் என்பதே அவர்களது பலகேள்விகளின் சாராம்சம். ஒரு நாவலாசிரியரோ சிறுகதை எழுத்தாளரோ ஓர் எழுத்தாளராக அன்றாடம் எழுதுவதென்பது அவர்களது வடிவம் சார்ந்த தேவை. ஒரு கவிஞன் எதற்கு இவ்வளவு எழுத வேண்டும் அல்லது அன்றாடம் எழுதித் தான் ஆக வேண்டுமா? …

பொன் நாள்

இன்றோடு ஐம்பது கவிஞர்களை எனது சிறு குறிப்புடன் பட்டியலாக்கமும் செய்து முன்வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒருவரெனக் கவிஞர்களுடனும் கவிதைகளுடனும் வாழ்ந்த இப்படியொரு காலம் வாழ்வில் முதல் முறையாக நிகழ்ந்திருப்பது. இத்தனை வருட வாசிப்பின் வழி எனக்குள் சேகரமாகிவரும் கவிதை பற்றிய மதிப்பீடு, பார்வைகளை உருவாக்கிய இக் கவிஞர்கள் என் முன்னோடிகள். ஒவ்வொருவரையும் மதிப்புடன் இக்கணத்தில் வணங்கிக் கொள்கிறேன். சதீஷ்குமார் சீனிவாசன், தர்மினி, ரஜிதா, ஆதி பார்த்திபன், பிரியாந்தி அருமைத்துரை, யோகி, …

பெண் நடந்த பாதை

என்னுடைய இளம் வயது முதல் கோயில்களின் உள்ளே செல்வது மிகவும் குறைவு. அதன் அழகியல் சார்ந்த அம்சங்களை ஒருதடவையிலேயே கிரகித்துக் கொள்வது தான் வழமை. அதற்குப் பின் அங்கு செல்வதற்கோ பார்ப்பதற்கோ எதுவுமில்லை. வெகு ஆழமாக எனக்கும் கோயில்களுக்குமிடையில் இடைவெளியொன்று எப்பொழுதுமே உண்டு. ஆனால் திருவிழாக்களைப் பொறுத்த வரையில் சிறு வயது முதலே அதன் நறுமணம் வீசும் தெருக்களின் மீதும் கண்ணொளிரும் விளக்குகள் மீதும் பல்வேறு அடையாளங்களுடன் விரியும் காட்சிகள் …

கள்ளும் கடலும்

காலையில் எட்டுமணிக்கு வெளிக்கிடுவதாய் தான் கதை. எங்கட பெடியளைத் தெரியும் தானே. எட்டென்றால் அவங்களுக்கு காதில பத்தென்று தான் கேட்கும். அப்பிடியொரு விசித்திரக் காதுகள். ஆதி, ஸ்டான்லி, கபில் ஸ்டனிஸ்லெஸ், யதார்த்தன், அனோஜன் பாலகிருஷ்ணன், காண்டீ, விபிஷன், சன்சிகன், தமயந்தி சைமன் இவர்களுடன் நானும். நமக்கு வழிகாட்டிகளாகவும் தோழர்களாகவும் மேலும் இரண்டு பேர். ஒன்பது மணி, பஸ் ஸ்டான்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள் பாதிப் பேர், மீதி மக்கள் கொழும்புத்துறை …

காவியத் தருணம்

“எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையாளும் நியதிகளின் போக்கு விந்தையானது தான்” – கோபி கிருஷ்ணன் – யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில் ஒரு முஸ்லிம் வியாபாரியை எனக்குத் தெரியும். கைகளில் பொருட்களை கொண்டு சென்று விற்று பிழைப்பவர். பல்வேறு தருணங்களில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சில நாள் கதைத்தும் இருக்கிறேன். ஒரு நாள், பஸ்ஸில் ஒரு இளைஞன், கையில் துண்டு சீட்டு ஒன்று வைத்து பிச்சையெடுத்துக் கொண்டு வந்தான். நானோ குழந்தை …