மொழியின் திகைப்பு

“Bro.. நீங்க சிறுகதை எழுத்தாளரா? த‌மி‌ழ் வெண்பா எழுதிய அனுபவம் உண்டு. இருப்பினும் உங்கள் கவிதைகள் சிறிது புரிய /புரியாத போல் உள்ளது…i think I need to have a brief introduction to understand” என்றொரு கேள்வியை புதிய நண்பரொருவர் அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கான பதிலை இளம் வாசகர்களுக்குமானதாக விரித்து இக்குறிப்பை எழுதுகிறேன். * என்னை எழுத்தாளர் எனும் வகையில் சுட்டலாம். கவிதை, புனைவெழுத்துகள், இலக்கிய விமர்சனம், …

சலாங்கையா – கடிதம்

அன்புடையீர், வணக்கம் “தளம்” இதழை அதன் ஆசிரியர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். “உங்கள் அண்ணனைப் பற்றி ஒரு சிறுகதை,வந்திருக்கிறது படித்துப் பாருங்கள்” என்று போன் செய்திருந்தார். நான் தெளிவத்தையின் தம்பி. தமிழ்நாட்டில் இருக்கின்றேன். அண்ணனின் சிறுகதைகளை நிறைய வாசித்திருப்பீர்கள். முதற்கண் அதற்கு நன்றி. அண்ணனுடைய அனைத்து சிறுகதைகளும் 59 ம் ஒரே நூலாக தொகுத்து வெளிவந்திருக்கிறது. தாங்கள் எங்கே இருக்கிறீர்கள். வெளிநாட்டிலா. சத்துரு கொன்றான் மட்டகளப்பில் இருக்கிறது என்று நினைக்கிறேன். …

கனவாகவும் காவியமாகவும்

இம்மாத (ஏப்ரல்) நீலம் இதழில் வந்துள்ள ‘பெருங்காவியம்’ சிறுகதை எனக்குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது சிறுகதை அல்ல. ஏழு கன்னிமார்கள் என்னும் தொன்மத்தை மறு உயிர்ப்புச் செய்து காட்டியுள்ள அப்புனைவு கவித்துவமான மொழியுடன் கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஈழத்தனி நாட்டுக்கான போர்க்காட்சிகளின் சில கீறல்களையும் மனவோட்டங்களையும் உருவகமாக எழுதிக் காட்டியுள்ள அப்பனுவல், ஈழப்போரில் நடந்த நிகழ்வுகளும் அழிவுகளும் தன்னையழித்துக்கொண்ட வீரதீரங்களும் தியாகங்களும் குமுறல்களும் பகையழித்த கொலைகளும் பெருங்கனவாகிப் போனது …

புஞ்சி மல்லி – குறிப்பு

ஏப்ரல் உயிர்மை இதழில் எழுத்தாளர் கிரிசாந் அவர்களின் “புஞ்சி மல்லி” வாசித்தேன். சந்தனி என்னும் இளம் பெண்ணிற்கும், கந்துல என்னும் குட்டி யானைக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கோபித்துக் கொண்டு, காட்டில் தொலைந்து போன கந்துல குட்டியை சந்தனியுடன் நாமும் சேர்ந்து தேடுகிறோம். புஞ்சி மல்லி என்றால், குட்டி தம்பி என்று அர்த்தமாம். அழகு. இருவருக்கும் இடையே உள்ள உறவை சந்தனியின் வழியாக சொல்லி இருப்பது …

லீலி – கடிதம்

கதை நல்லா இருந்தது. உங்க கவித்துவமான மொழி நடை, இந்த கதையை ஒரு படி மேலெடுத்து செல்கிறது. “காதலைத் தட்டி எழுப்பாதீர்…தானே விரும்பும் வரை” இந்த ஒற்றை வரி மொத்தக் கதையையும் தாங்கி நிற்கிறது.  ரோசி சிஸ்டருடான லீலி அம்மாவின் உறவு பற்றி வெளிப்படையாக சொல்லாமல் செல்வதும், அதே போல் மிர்னாவிற்கும், லீலிக்கும் உள்ள உறவும்… லீலியின் அம்மா அப்பாவின் சாவு நிகழ்வை பற்றிய உங்க சித்தரிப்பு பதைக்க வைத்தது. …

கொடிறோஸ் – கடிதம்

வணக்கம் கிரிசாந், கொடிறோஸ் குறுநாவல் வாசித்தேன். மிக நேர்த்தியா எழுதி இருக்கிறீங்க. கதைக்கு உள்ளே வாழ்ந்தது போன்ற அனுபவம் கிடைத்தது. சில இடங்களில் கண்கள் பனித்தன. அம்மாவை நான் இழந்த போது எனக்கு முப்பது வயது. அவருக்கு இரத்தத்தில் கிருமி தொற்று.. நீண்ட காலம் இழுத்தடி பட்டு இறந்தா. மரண வீட்டு கடைசி கட்டங்கள் கண் முன்னால் நடந்தன. வாசித்து முடிச்ச பிறகும் மனசில தாக்கம் இருந்தது. அம்மாவின் மரணம் …

பட்டு நூல் – கடிதம் 2

பட்டு நூல் வாசித்தேன். மிக அருமையான கதை. ஒரு யுத்த பூமியில் பண்பாடு என்பது எப்படி இருக்கும்னு காமிச்சிருக்கீங்க. அதை கதையில் விவாதமா அடுக்கடுக்கி வைச்சு சொல்லியிருப்பதும் அழகு. “பண்பாட்டில இருக்கிறதென்பது மீன் தண்ணிக்கை இருக்கிற மாதிரி …. உன்ர உடம்பால அதை அறிய வேணும்.” … அதெல்லாம் வாசிக்கும் போது ஆமால்ல… னு சொல்லத் தோணுச்சு… அப்புறம் விஷ்ணுபுரம் படிச்சிட்டு கோயில் கோயிலா சுத்தாதவங்க யாராவது இருப்பாங்களா.. எனக்கு …

கல்விரல் – குறிப்பு 4

ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும்  தொகுக்கப்பட்டுள்ளன.  ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இது இவரது சமீபத்திய நாவல். இத்தனை வருடங்கள் வாழ்ந்த பிறகு தோன்றும் பட்டறிவு,  இருத்தலைக் காப்பாற்றிக் கொள்வதே எல்லாவற்றிலும் முக்கியமானது. நாம் தனியல்ல, ஒரு …

பட்டு நூல் – கடிதம்

வணக்கம் கிரி, பட்டுநூல் கதை வாசித்து முடிக்கும்போது நிறைவில் கண்கள் குளமாகிவிட்டன. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த எங்கள் பண்பாட்டு தனித்துவம் என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது.  சிலைக்கு கண் திறக்கும் செயல் கலையாக மாறுமிடம், குருபாவா முகைதீன் பற்றிய தரவுகள், கதையில் யாழ்ப்பாண சித்தர் வரும் தருணம் போன்றவை கதைக்குச்சிறப்பான வாசிப்பனுபவத்தை அளித்தது. நன்றி. அன்புடன் மாக்கி * சிலைக்கு கண் திறப்பது போலத் தான் பகுத்தறிவும் …

கல்விரல் – குறிப்பு 3

கிடாயில் அமர்ந்திருக்கும் பிசாசொன்று போரின் வடுக்களை மேய்கையில் அலையுறும் பெண் மனம் இந்நாவல். போருக்குப் பின்னான ஒரு நிலத்தில், செல்லடித்து விழுந்து கிடக்கும் ஒரு பனை மரத்தில், தனது கூட்டைத் தொலைத்துவிட்டு தேரிக்காடெங்கும் தேடியலைகிற தூக்கணாங் குருவியொன்று அதன் குஞ்சுகளின் அவலத்தை கழுகுகளுக்கும் பாம்புகளுக்கும் முன் நின்று பாடுவதாய் ஒரு நாவலை எழுதி முடித்தல் கடினமானது. இயக்கத்தில் இருந்த போரளிகள் குறித்து பிற்காலச் சூழலில் எழுதப்பட்ட கதைகள் வெகு குறைவாகவே …