ஞான பீடம் : கண்டனம்

“யோவ் மிலிட்ரி .. வைரமுத்துக்கு ஞான பீடம் கொடுத்தற்கு கண்டனமில்லையா? அகழ் போன்ற பண்ணையார்புரங்களே கண்டனம் வெளியிட்டு விட்டன. தமிழ் இலக்கிய உலகமும் இணையப் பெண்ணியர்களும் ஒரே கோரிக்கைக்காக அணிந்திரண்டு நிற்கும் இது போன்ற அபூர்வமான ஒரு வரலாற்றுத் தருணம் இனி நடக்காது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மான்களும் புலிகளும் ஒரே கோரிக்கைக்ககாக முழக்கமிடுகின்றன. 

வெட்டு ஒன்றாய்ச் சொல்லுங்கோ. யுத்தத்தில நீங்கள் ஆற்ற பக்கம்?” 

“பிதாமகற்ற”.

“தமிழ் இலக்கிய உலகத்தை காசைத் தூக்கி அடிச்சு காட்டியிருக்கிறார். ஆணவம் இல்லையா? மானமுள்ள தமிழ் எழுத்தாளன் அந்த ஒரு கோடியைக் கையால் தொடுவானா?”

“ம்ம்ஹ்ம். தொடமாட்டான். அல்லும் பகலும் அந்தக் காசைக் கனவு கண்டு அலறி விழிப்பான். இதுவரை கண்டனமும் கலாய்ப்பும் எழுதியவர்களின் லிஸ்ட்டைப் பாருங்கள். அவர்கள் அவசரத்துக்கு கடனுக்கு கேட்டால் சொந்த அம்மை சகிக்க மாட்டாள். போடா விளங்காத பயலே என்று அடித்து விரட்டுவாள். .

அந்த ஒரு கோடியைக் கூட மானமுள்ள தமிழ் எழுத்தாளன் கால் தூசாக உதறி விடுவான் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் தமிழ் பெண்கள் கண்ணீர் விட்டபடி தங்கள் நகைகளை ஆசானுக்கு கொடுப்பதாகச் சொல்லிய காட்சியை அவர்களால் இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது” 

“ம்ம். உண்மை தான். ஆனால் போகன் சங்கர் கூடவா?” 

“லிஸ்ட்டில் முதல் ஆளே அவர் தான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *