பட்டு நூல் – கடிதம் 2

பட்டு நூல் வாசித்தேன். மிக அருமையான கதை. ஒரு யுத்த பூமியில் பண்பாடு என்பது எப்படி இருக்கும்னு காமிச்சிருக்கீங்க. அதை கதையில் விவாதமா அடுக்கடுக்கி வைச்சு சொல்லியிருப்பதும் அழகு.

“பண்பாட்டில இருக்கிறதென்பது மீன் தண்ணிக்கை இருக்கிற மாதிரி …. உன்ர உடம்பால அதை அறிய வேணும்.” … அதெல்லாம் வாசிக்கும் போது ஆமால்ல… னு சொல்லத் தோணுச்சு…

அப்புறம் விஷ்ணுபுரம் படிச்சிட்டு கோயில் கோயிலா சுத்தாதவங்க யாராவது இருப்பாங்களா..

எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சில இடங்கள் கண் கசிய வைத்தது. நன்றி, வாழ்த்துக்கள்.

மதுபாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *