பொழிவு

நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

வெறுமையாக கைகளை நீட்டிக் கொண்டு

வெய்யில் பொழிவதை ஏந்திக் கொண்டு

தனிமையை வேடிக்கை பார்த்துக் கொண்டு

உன்னை நீயே நொந்து கொண்டு

உனக்கு நீயே ஆறுதல் சொல்லிக் கொண்டு

மஞ்சள் பூக்கள் பெய்வதைப் பார்த்தபடி

உனக்கு யாரும் இல்லையென்பதை உணர்ந்ததாகச் சொன்னாய்

அப்படி ஒருவரும் உடனே ஞானத்தை அடைவதில்லை என்றேன்.

பரிவில்லாத நாட்களின் போதும்

அஸ்த்தமனங்களிலும்

உதயங்களிலும்

நீ பார்க்கிறாய்

சூரியன் ஒளிர்கிறது

உதிப்பதிலும் மறைவதிலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *