ஜெயமோகன் தளத்தில் பாலையில் முளைத்தல் என வெளியான குறிப்பில் இலங்கைத் தீவின் மேல் எங்கள் முகங்கள் இருப்பது போன்ற படத்தைப் போட்டிருந்தார்.
தமிழ் கூறும் நல்லுலகை ஆண்டு வருபவர், மும்முடிச் சோழமண்டலத்தின் பேரரசர் ஜெயமோகன் தான் என்பது ஒரு ஈழத்து நாட்டுப்புறக் கதை. ஆகவே அவர் எங்கள் முகங்களை போட்டதை கேலி செய்யும் மீம்ஸ்களைப் பார்த்தேன். தர்மு பிரசாத்தும் தன் பங்கிற்கு எளிய மீமாஸ்ஸகர்களுடன் இணைகிறார்.

தோழர்களே, இலக்கிய விவாதங்களில் மீம்ஸ்களுக்கு இடம் கொடாதீர். தீவிரமாய் கத்தியை உருவியபடி குகை விட்டு சிகை குலைத்து சிம்மங்களென எழுக.

