Tag: ஆளுமை

சர்ப்பத்தின் வால் நுனி

Kiri santh- March 25, 2024

தமிழின் அகமும் புறமுமான கவிதை அடுக்குகளுக்குள் இரண்டின் வெளிகளுக்குள் நுழைந்து மீளும் தன்னிலைகள் ஈழத்தமிழ்க் கவிதைகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. சண்முகம் சிவலிங்கம் அவரது அரசியல் கவிதைகளுக்காக தொடர்ந்து கவனிக்கப்படுபவர். அவரது அரசியல் கவிதைகள் நீரின் ... Read More

காட்டருவியின் சுனை

Kiri santh- March 24, 2024

ஒரு மொழியின் பிரக்ஞைக்குள் முதற்குரல்கள் உருவாகும்போது அவை சீற்றமும் அலைவும் கொண்டவையாகவே எழும். எந்தவொரு முதற்குரல்களும் மொழியில் நுழையும் தன்மை அதுவே. நவீன பெண் தன்னிலை தனது அரசியலை வெளிப்படுத்திய முதற்குரல்களில் ஒருவர் செல்வி. ... Read More

மகிழ்ச்சியான உறுமல்

Kiri santh- March 23, 2024

மொழிக்குள் நொதித்து மொழியைச் சீவித் தன் கலயத்தில் வார்க்கும் கலைஞர்கள் நிகழ்வதுண்டு. தமிழுக்குள் பனைகளின் முலையெனத் திரண்ட மொழி வெய்யிலினுடையது. பனைகள் நெடிது நிற்பவை, இரண்டு காதுகளில் இரண்டு கலயங்கள் தொங்கும் பனை, முதுதாயின் ... Read More

இளங் கோதல்

Kiri santh- March 22, 2024

மொழிக்குள் துணிச்சலுடன் நுழைந்து விட்ட திருடனொருவன் அதன் யாருமறியாத பொக்கிஷங்களை அள்ளித் தன் குகைக்குள் சேர்ப்பது போல் தமிழுக்குள் நுழைந்த கள்வன் இசை. அநாயசமான தோற்றம் கொண்ட எளிமையான கள்வன் என்ற தோற்றமே இசையின் ... Read More

கண்ணீர் மிக்க ஒளியுடையது

Kiri santh- March 21, 2024

ஈழக் கவிதைகளின் மொழியுள் தேச விடுதலை என்ற கனவுடன் எழுந்த கவிஞர்களில் அக்காலம் முழுவதிலும் அதன் பின்னரும் சக பயணியாயும் சாட்சியாயும் எழுதப்பட்ட கவிதைகள் கருணாகரனுடையவை. அவரது மொழி தளும்பும் குடத்தின் நீராட்டம் போன்றது. ... Read More

புலிக்கு அதன் உடலே கானகம்

Kiri santh- March 20, 2024

பெண் தன்னிலை தன் இருப்பின் திறவுகளுக்கு மொழியின் பிரக்ஞ்ஞையில் அறுக்க வேண்டிய தளைகளை, கவிதை ஒரு தோட்டக்காரரைப் போல் தேவையற்றதை வெட்டி, தேவையானவற்றைப் பராமரித்து நீரூற்றிப் பாதுகாத்து வருகிறது. மொழிக்குள் பெண் குரல்கள் தனது ... Read More

பொன் வாள்

Kiri santh- March 19, 2024

மொழிக்குள் சில கவிஞர்கள் அரிதான ஒருங்கிணைவுகளைப் பெறுவார்கள். ஒரு மக்கள் திரளின் கூட்டு மனத்தின் பொன் வாளென அவர்களது கவிதைகள் திரண்டு வருவன. அவை போருக்குரியவை அல்ல. அம்மக்களின் அகத்தின் ஒவ்வொரு இழைகளும் நுட்பங்களும் ... Read More

ஒரு குட்டி நட்சத்திரம்

Kiri santh- March 18, 2024

மொழிக்குள் அரசியல் பிரக்ஞை உள்நுழைவது கத்தியால் அதன் இதயத்தைக் கீறி அதை மீளத் தைப்பதைப் போன்றது. அதன்பின் அதுவரையான மொழியுடல் வெட்டப்பட்ட மரமொன்று மீளத்துளிர்ப்பதைப் போல, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கின்றது. சிவரமணியின் கவிதைகள் ... Read More

நூல் பிறையளவு கொடை

Kiri santh- March 17, 2024

கசந்து வெண்ணிறமாகப் புன்னகைக்கும் மொழி பிரான்சிஸ் கிருபாவினுடையது. மொழி ஒரு கோப்பை வைன் என்றால் அதன் ஆயிராமாண்டு காலத் துயர் பிரான்சிஸின் சொற்களில் வடியும் கைப்பு. வாழ்வின் உவர்ப்பளிக்கும் அந்தரத்துடன் கத்திக் கொண்டு எதிர்ப்படும் ... Read More

எரியும் ஒரு பிடிப் பிரபஞ்சம்

Kiri santh- March 16, 2024

மனதின் உள்ளிணைவுகள் தீவிரங் கொண்டு மொழியை மோதுகையில் சிதறும் நட்சத்திரத் தீற்றல்கள் என மொழியில் பட்டுத் தெறித்தவை பிரமிளின் கவிதைகள். பிரபஞ்சம் என்பது ஓர் பருவெளி. அதன் நிறக்கோலங்கள், கருவிடை வெளிகள், காலங்கள் அமிழாமல் ... Read More