Tag: கவிதை
உருவச் சிதைப்பிலிருந்து பருமட்டான உருவத்துக்கு
* கண்ணாடிப் பேழைக்குள் நெளியும் பாம்புகள். திருவிழாத் தெருக்கள் கலகலத்துக் கொண்டிருக்கின்றன. ஞாபகம் தன் அந்தக் கணத்திலிருந்து ஆதிக் கணம் வரை திரும்பத் திரும்ப அலைகிறது. பாதளக் கிணற்றில் ஓடும் மோட்டார் சைக்கிளைப் போல் ... Read More
ஒரு குட்டி நட்சத்திரம்
மொழிக்குள் அரசியல் பிரக்ஞை உள்நுழைவது கத்தியால் அதன் இதயத்தைக் கீறி அதை மீளத் தைப்பதைப் போன்றது. அதன்பின் அதுவரையான மொழியுடல் வெட்டப்பட்ட மரமொன்று மீளத்துளிர்ப்பதைப் போல, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கின்றது. சிவரமணியின் கவிதைகள் ... Read More
நூல் பிறையளவு கொடை
கசந்து வெண்ணிறமாகப் புன்னகைக்கும் மொழி பிரான்சிஸ் கிருபாவினுடையது. மொழி ஒரு கோப்பை வைன் என்றால் அதன் ஆயிராமாண்டு காலத் துயர் பிரான்சிஸின் சொற்களில் வடியும் கைப்பு. வாழ்வின் உவர்ப்பளிக்கும் அந்தரத்துடன் கத்திக் கொண்டு எதிர்ப்படும் ... Read More
எரியும் ஒரு பிடிப் பிரபஞ்சம்
மனதின் உள்ளிணைவுகள் தீவிரங் கொண்டு மொழியை மோதுகையில் சிதறும் நட்சத்திரத் தீற்றல்கள் என மொழியில் பட்டுத் தெறித்தவை பிரமிளின் கவிதைகள். பிரபஞ்சம் என்பது ஓர் பருவெளி. அதன் நிறக்கோலங்கள், கருவிடை வெளிகள், காலங்கள் அமிழாமல் ... Read More
மகத்தான மாகளிறு
தமிழ்க்கவிஞர்களை ஒரு யானைக் கூட்டமென்று கொண்டால் மொழிக்காட்டில் அலையும் இக்கூட்டம் அதன் மூதறிவைச் சுமப்பவை. தம் உணர்கரத்தால் திசைகளையும் நறுமணங்களையும் உள்ளீர்ப்பவை. பித்தேறி வெருண்டு காட்டைப் புரட்டுபவை. அக்கூட்டத்தின் மகத்தான மாகளிறுகளிலொருவர் மனுஷ்ய புத்திரன். ... Read More
எல்லாமே கவிதை அல்ல அல்லது எல்லாமே கவிதை
தேவதேவனின் கவிதைகள் பற்றி எழுதுவதற்கான முதற் சொல்லை மனதில் துழாவியபடி இந்த அதிகாலைப் பனியில் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு இளம் பெண் கையில் வீணையைத் தூக்கியபடி நடந்து வந்து அருகில் நின்றார். தற்செயலாய் அவர் ... Read More
மூப்பரின் உளி
இதுவரை பிறந்தவர்க்கும் இனிப் பிறக்கவிருப்பவருக்கும் நெஞ்சினுள் ஒரு சின்னஞ்சிறு கருங்கல் அளிக்கப்பட்டிருக்கிறது. அது கூடியுருண்ட மாபெரும் கருங்கல் மலையின் சிறு பொடி. அதனை மலையென ஆக்கும் பணி கவிஞர்களுடையது. அக்கூட்டின் இழைவை உளிமுனையால் ஒட்டும் ... Read More
ஓதி எறிந்த சொற்கள்
விளிம்பின் அகமொழி மையத்திற்குள் நகர்கையில் அவை ஓதி எறியும் சொற்களெனவும் சூனியத்தின் மாந்திரீக மொழியெனவும் ஆகும். தன்னைக் கேட்பவரை ஆவாகனம் செய்து வசியத்தின் விழிகள் சொருக நிற்க வைக்கும். அம்மொழியின் உள்ளெரியும் கனலால் அடி ... Read More