Tag: புனைவு

10: மயக்கு விளி

Kiri santh- May 25, 2024

"போரில் நான் கொன்றவர்களை உயிருடன் எழுப்பினால் இன்னொரு அரசையே நான் நிறுவ முடியும் மூடனே" என்று ஆங்காரமாகக் கத்தியபடி தன் வெட்டுப்பட்ட குறைக் கரத்தை உயர்த்தியபடி மதுவில் உடல் நடுங்க மதுச்சாலை வாசலில் சாய்ந்திருந்தான் ... Read More

09: படையல் விளி

Kiri santh- May 24, 2024

"மூநாள் திருவிழா நாளை தொடங்கவிருக்கிறது. ஒரு லட்சம் குடிகளுக்காவது உணவிட வேண்டும் மச்சாள். நீ அரியும் வெங்காயங்களை வைத்து ஒரு குழந்தைக்கு கூட உணவு கொடுக்க முடியாது" என்று சொல்லிக்கொண்டு வெற்றிலை வாயைத் துப்பிவிட்டு ... Read More

08: பலி விளி

Kiri santh- May 24, 2024

மாலை கரைசேரும் யவன மரக்கலனில் தனக்கான வலிநீக்கு ஒளடதங்கள் வந்து சேரும் எனப் பேராவலுடன் காத்திருந்தான் தமிழ்க்குடியின் முதற் பரதவ அரசன் நீலழகன். போரில் அங்கங்களை வெட்டி வீழ்த்தும் போதும் ஆயிரமாயிரம் அம்புகள் பெருமழைப் ... Read More

07: சித்த விளி

Kiri santh- May 23, 2024

ஆடற் சித்தனின் சாம்பல் ஊறிய மேனியில் நெளிகாற்றொன்று மோதி கடுங்குழலைக் கலைக்க முடியாமல் அஞ்சி விலகி இன்னொன்றாக உருமாறிச் சென்று மறைந்தது. பல பருவங்களாக ஆறுகளிலும் குளங்களிலும் ஆழியிலும் குளித்துத் துணியால் உலர்த்தாமல் வெய்யிலில் ... Read More

06: யட்சி விளி

Kiri santh- May 22, 2024

பேரரசி நிலவை சொப்பிரஸ் மரக்கலன் கரைக்குச் சேர்ந்த தகவல் அரசன் நீலழகனுக்குக் கிடைத்த பொழுது நீராடப்போவதாகச் சொல்லி அரண்மனையின் நீரகத்திற்குச் செல்ல ஆயதமானாள். இறுதியாக நடந்த போரில் அரசனின் நெஞ்சில் கீறிய வாளினாலும் அங்கத்தில் ... Read More

05: மந்திர விளி

Kiri santh- May 21, 2024

ஆழியின் மேற்பரப்பு செந்தீயென ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்தியின் மேகங்கள் பழுப்புப் பச்சையும் பொன் மஞ்சளும் குழைந்த ராட்சத மேக ரதமென உருவமைந்திருந்தது. ஆழிப் புறாக்கள் மரக்கலத்தின் பின்னே குறுவால் எனத் தொடர்ந்து பறந்து வந்தன. ... Read More

04: நாத விளி

Kiri santh- May 20, 2024

பதும்மையின் அறைச் சாளரத்தை மாலையின் குளிர் வருடியபடி இருந்தது. மணிக்கதவம் தாழிடப்பட்டிருந்தது. பதும்மை தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருக்கிறாள். விரும்பும் போது வெளியே வருவாள் என முதுபரத்தை அங்கினி வேறுகாடாருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். வேறுகாடார் தாம்பூலத்தை ... Read More

03: களி விளி

Kiri santh- May 19, 2024

சாமியாடி தங்கிட தத்தரின் மகள் சுழல்விழி ஆகாயத்தின் கடைசி விண்மீன்கள் இருளுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் அதிகாலையில் கற்கோவிலுக்குச் செல்லும் பெருவீதியால் நடக்கத் தொடங்கினாள். சூழ நின்றிருக்கும் ஒவ்வொரு நெடுவிருட்சமும் அவளின் துணை தெய்வங்கள். கைகளில் ... Read More

02: துதி விளி

Kiri santh- May 18, 2024

பதும்மை தன் காம்புகளை ஆடியின் முன் நின்று விரல்களால் நீவினாள். ஈரலிப்பான காற்று அறைக்குள் நுழைந்து சுற்றியிருந்த திரைச்சீலைகளைக் கைளால் சுருட்டி அலைத்தது. சாளரத்திற்கு அருகில் நின்ற மல்லிகைக் கொடி தன் நறுமணத்தை அறைக்குள் ... Read More

01: ஊழி விளி

Kiri santh- May 17, 2024

காலம் இன்னதென்று கணக்கிடாக் காலமொன்றில் ஓர் ஊழி எழுந்தணைந்த பெருநிலத்தில் குழல் கலைந்து தோள் புரள நிற்கிறான் இளம் பாணன். மிச்சமிருக்கும் புடவிக்குத் தன் உதிரத்தின் ஒவ்வொரு சுழிப்பிலும் மூழ்கியெழும் மானுடக் காதைகளைப் பாடுதற்கு ... Read More