Tag: கவிதை
மூக்குத்தியின் அலையும் சுடர்
நவீன தமிழ்க் கவிதையை அடிவயிற்றிலிருந்து இதயம் வரை நகர்த்திய முன்னோடி சுகுமாரன். மொழி ஒரு ராட்சத ஒக்டோபஸ் போலத் தன் அனைத்துக் கரங்களையும் நீரில் துழாவி அசையக்கூடியது. அதன் இருவிழிகளே மொழியின் பிரக்ஞை. அங்கிருந்து ... Read More
நும்மார்பிற் பாம்பு
தமிழில் சுடுகாட்டின் நிகருலகையும் பக்தியையும் இணைத்த பெருபேய் காரைக்கால் அம்மையார். சிவன் என்ற கடவுளுருவுடன் உண்டாகும் உறவை, பக்தி நிலைப் பாவமாகக் கொள்ளும் வாசிப்பு பெருமளவு உள்ளது. ஆனால் அதன் புறவுலகைச் சாம்பலைப் போலுதிர்த்து ... Read More
சணற்காட்டில் மஞ்சள் மெளனம்
கற்சிற்பங்களாலான ஒரு மாபெரும் அரண்மனை மொழியென்றால் அதன் ஒவ்வொரு நுண்மையும் வாளிப்பும் திரட்சியின் முழுமையும் கவிதையினால் உண்டாகுவது. பூ வேலைப்பாடுகள், ஆண் பெண் உடல்கள், அதீத மிருகங்கள், பறவைகள், கனவுகள் எல்லாமும் மொழியில் கவிதையால் ... Read More
கள்ளவிழ் செண்பகப் பூமலர்
தமிழ் மரபின் பக்திச்சுவை பெண்ணுள்ளத்தின் காதலெனவும் காமமெனவும் திரண்டதன் மகத்தான முதற் குரல் ஆண்டாளுடையது. சேராக் காதலின் ஏக்கமும் உடல் விதிர்விதிர்த்துக் காமம் ஒவ்வொரு மயிர்நுனியிலும் பனியூறுவது போல் மலர்வதும் ஆண்டாளின் மொழியில் கவிதைகளென ... Read More
குழந்தை கண்ட மின்னல்
கவிதை மொழியின் கலை. இருட்டில் ஆயிரணக்கான மின்மினிகள் இருளின் கண்களென ஆகி எங்களைப் பார்ப்பது போல் கவிதை வரிகள் அகத்தில் விழித்துக் கொள்வன. அன்றாட வாழ்விலிருந்து மேலெழும் மின்மினிகள் எவ்வளவு உயரம் பறந்திடல் கூடும்? ... Read More
பிறழ்வுகளின் தெய்வம்
ஒரு மரபில் கனவுகளிற்கான தெய்வங்கள் நிகழ்வதைப் போல பிறழ்வுகளுக்கும் தெய்வங்கள் நிகழ்கின்றன. மொழிக்குள் வாழும் கோடிக்கணக்கான மனித மனங்கள் தத்தம் தெய்வங்களை அறிந்து தம்மை அத்தெய்வங்களின் சந்நிதிகளில் ஒப்படைப்பார்கள். கனவுகளின் தெய்வங்கள் கொண்டாட்டமான திருவிழாக்களை ... Read More
கனவுகளின் தெய்வம்
எந்த விடுதலைக்கான மொழியும் கேள்விகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்துமே அடிப்படையில் எழும். பின்னர் அவ்விடுதலை தன் கனவைத் தானே கண்டாக வேண்டும். ஒரு ஆன்மீக விடுதலை அடிப்படையில், இந்த வாழ்வு எதன் பொருட்டுப் பொருள் கொள்ளத் தக்கது? ... Read More
உடுக்கொலியும் பறையும்
விடுதலைப்போராட்டத்தின் உள்ளோடும் உணர்ச்சிகள் வெளிப்படும் மொழி ஒருவகையில் சன்னதமும் உருவும் கொண்டது. அதற்குத் தன் மொழியை வெகுசன மொழியையும் பைபிளினதும் உரைநடையினதும் கூர்மையான சில இணைவுகளைப் பயன்படுத்தி தனக்கென ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ... Read More
திரிச்சுடர்
யாருடைய சொல்லையும் யாரும் நம்ப முடியாத காலம் வருமென்றுகனவா கண்டது எந்தக் கனவும் கலைந்து விழிப்பது என்றுஅறிந்தா செல்வது ஒளிரும் லாம்பினடியில்குவிகிறது இருள். குவிந்த இருட்டைக் காற்று அசைக்கிறதுஉள்ளெரியும் திரிச்சுடரால். (2024) Read More
சிறு நாவுகளின் தொடுகை
கறையான்கள் தன் எச்சிலால் உண்டாக்கும் புற்றின் மண்ணைத் தொட்டெடுக்கும் ஈரம் பல்லாயிரம் சிறு நாவுகளின் தொடுகை. அதிலிருந்து ஒரு மாபெரும் புற்று உருவாகிறது. அதனுள் பல்லாயிரம் உயிர்கள் வாழும். அது உறைந்து நின்று மண் ... Read More