Tag: புனைவு
100: எதிராட்டக்காரி : 02
இவள் பிறிதொன்றின் தெய்வம் என அதிர்ந்தான் பொன்னன். சொல்லில் எழும் மயக்கிற்கு அப்பால் எங்கோ ஒரு தொல்முனையில் வீற்றிருக்கும் மானுடர் அறிய ஒண்ணாத மானுட தெய்வம். இவளை அறிந்தால் மானுடம் தன் முதல் கூழாங்கல்லை ... Read More
99: எதிராட்டக்காரி
சுவடிகை லீலியாவைச் சென்று எழுப்ப விழைந்தாள். சத்தகன் முன்முகப்பிலிருந்து ஆழிக்கரையை நோக்கிச் சொல்லற்று நின்றிருந்தான். கோட்டையின் காவல் நிலைகளில் நின்றிருந்த புலிவீரர்கள் தீப்பந்தங்களினை நூர்த்தபடி சூரிய ஒளியில் கவசங்கள் மினுங்க பணிகளை ஒருக்கிக் கொண்டிருந்தனர். ... Read More
98: ஊர்தி : 02
வேறுகாடார் நிமிர்ந்து கொண்டு உலகளந்தோனின் வருகையை நோக்கிக் கொண்டிருந்தார். "வருக. இளையோனே. பணிகள் ஒருக்கியாயிற்றா" என்றார். "நான் சென்ற பணிகள் எப்போது முற்றுறாமல் போயிற்று மூத்தவரே. அனைத்தும் சிறப்பாய் நிகழ்ந்தன. களியாடி உங்கள் இளமை ... Read More
96: தணல் மலர் : 02
"என்னவாயிற்று இளையோரே. களி காலத்திலும் கலைப் பூசல்கள் தேவையா" என்றார் வேறுகாடார். இளம் பாணன் எழுந்து சென்று சாளரத்தின் அருகிருந்த மரப்பெட்டியில் சாய்ந்து கொண்டு தீயிலைத் துதியை உறிஞ்சினான். "கலைப் பூசல்களுக்குப் பருவமோ பொழுதோ ... Read More
95: தணல் மலர்
விழைவுகளில் நான் பெருங்களி எனச் சொல்லி குயில் போலச் சிரித்த விருபாசிகையில் புலரியின் பனி மேகத்தில் ஊறும் நீரெனத் திரண்டிருந்தது. கூந்தலின் இழைகள் மஞ்சம் போல மலர்கள் உதிர்ந்து தூங்கியது. இரவு எழுந்து மனை ... Read More
94: பாற்கடலிகள்
முதிய மருதமரங்கள் கலகலத்து வீசிய புலரிக் காற்று முதுகிலறைய புலிகளின் இளம் வீரர்கள் குழுவொன்று வனவிளிம்பைக் கடந்து பட்டினத்தை நோக்கிய நீண்ட பெருஞ்சாலையில் நுழைந்தது. ஆதவனின் ஒளிப்பற்கள் முதுகில் மழலைக் கடியென வீழ்ந்து கொண்டிருந்தது. ... Read More
93: குருதி வேலன்
முன்முகப்பின் மேற்கூரையின் மேல் ஆயிரக்கணக்கான புறாக்கள் குறுகுறுத்துக் கொண்டிருக்குமொலிகள் பாதத்தில் ஆற்றங் கரை மணல்கள் உருள்வது போலத் தோன்றியது சுவடிகைக்கு. அவளது ஒளிக்கூச்சலிடும் விழிகளை அசைத்து புறாக்களின் குதுகுதுப்பான மேனிகளை நோக்கினாள். ஒவ்வொன்றும் பருத்தவை ... Read More
92: மணநாள்
பனிக்காற்று முன்முகப்பின் கருங்கல் வளைவுகளில் தாவியார்த்து மேவியது. அரண்மனையின் காவல் கோபுரங்களில் தீப்பந்தங்கள் நாவடக்கத் தொடங்கின. சத்தகனை நோக்கியபடியே "என்னவென்பதை அறிக இளையோனே. அவள் உன் களித்தோழியென உடனிருக்க வேண்டுமென என் அகத்தில் வண்டொன்று ... Read More
91: குழவி நாகங்கள்
உசை "நீலா நீலா" என மிழற்றிக் கீச்சிய போது தானகி விழித்துக் கொண்டாள். நிலவையின் இடையில் அணைத்துக் கிடந்த தனது கைகளை மெல்லிய நடுக்குடன் விலக்கிக் கொண்டாள். நிலவை வேலெறிய ஓடுபவள் போல துயிலமைவிலிருந்தாள். ... Read More