“நான் அஞ்சுவது என் தாகத்திற்கு மட்டுமே” என்றான் ஓசையிலான். “நீ சொல்லிய சொற்கள் எங்கோ எவரோ சொல்லிக் கொண்டிருக்கும் நீண்ட பாடலின் சிறு சிரங்கையளவு கொண்டவை. அவை வாழ்வை அறிந்து விலகியவர்களுக்கானது. உனது நாவுக்குச் சுவையே பழகவில்லை. நீ எங்கனம் சிவத்தை எண்ண முடியும்….
Month: July 2024
57: நூறு தேனீக்கள் : 02
புரவியின் ஆண்குறி சளசளக்க அதை வாயிலிட்டுக் குதப்பினாள் சுகுமாரி. பராக்கிரம தன் குறியில் அவள் வாய் உமிகிறது என எண்ணிக் கொண்டான். உடல் மெய்ப்புக் கொண்டு வியர்வை நழுவத் தொடங்கியது. புரவி தாங்காத வேகத்தில் அவள் வாயில் குறியை நுழைத்து எடுத்தது. விழிநீர் கசிந்த…
56: நூறு தேனீக்கள்
பராக்கிரம வீர தன் கழலில் கட்டியிருந்த கரும்புண்ணை நோக்கியபடி அன்ன சத்திரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது உச்சிவெயிலின் கனற்கட்டியொன்று தன் கழலில் துடிக்கிறதென எண்ணினான். தன் தோள்களை அழுத்தி நரம்புகளை இறுக்கிக் குருதியை உந்திய போது கழலுள் குருதி சுழன்றோடும் வேகம் இதமாயிருந்தது….
55: அத்திரிச் சாம்பல் : 02
“அம்புகளால் எய்தெறிந்த புயற் காற்றென அக்கையின் பக்கச் சிறகு வேல் முனையை நெருங்கி பருந்து ஒற்றைச் சிறகால் கொல்வேல் முனையை அணைப்பதைப் போல் குவிந்தது. பின்னிருந்து வந்த வேழப்படை அக்கையின் பின்னர் ஒருங்கியது. உக்கிரமான போர் இருளில் சுடர்களின் நெளிவுகளெனத் தோன்ற வெட்டுண்டும் அம்புபட்டும்…
54: அத்திரிச் சாம்பல்
“துயரை தெய்வத்துக்குச் சூட்டுவதன் மூலம் தங்களில் ஒருவரென தெய்வத்தை மானுடர் கீழிறக்குகிறார்கள் பெருந் தளபதி” என்றார் முதுதேரோட்டி அரும்ப முல்லர். சத்தகன் அவரை நோக்கிப் புன்னகைத்து விட்டு “துயரா. அது போர்க்களத்தில் ஒரு ஆயுதம் மட்டுமேயல்லவா. துயரென்பது எதிரிகள் நம்மீது பாய்ச்சும் சக்தி வாய்ந்த…
53: ஐம்புதல்வர்
“எண்ணுந் தோறும் நழுவும் ஒன்று கலையில் அமைந்திருக்கிறது இளையவரே. ஆன்மீகத்திலும் அவ்வண்ணமே. ஞானம் அடைய எண்ணியிருப்பதும் கூட ஒரு தடையாக அமையலாம். வழிகள் பிரிந்து ஆயிரம் திரிகளாய் ஞானப் பாதை சுடர்களுக்காகக் காத்திருக்கிறது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியை அறிவிக்கிறது. ஞானமென்பது புடவியை வெல்வதல்ல….
52: திசையிலான்: 03
அனல் முகத்தோன் வீற்றிருந்த ககனத்தின் கீழ் நத்தையலைகள் அடித்த சிறுகடலிலிருந்து கொற்றனின் இருகால் பிடித்துக் களிமணலால் இழுத்துச் சென்றார் கம்பளி வைரவச் சித்தர். அவன் மூர்ச்சையடைந்து தேகம் சுவாசத்தின் கலமென மட்டுமே எஞ்ச அவரிழுப்புக்குப் பின் சென்றான். பேருருவரான கம்பளிச் சித்தர் சிறு காளையொன்றை…
51: திசையிலான்: 02
கிழக்கின் கீழ்த்திசையில் கழலில் குலுங்கும் சிலம்புடன் உவகையின் நடுக்குடன் ஒரு கழல் மணலின் கன்னம் பிளந்து செதுக்கப்பட்டிருந்தது. கொற்றன் தன் விழிகளால் துழாவி அக்கால் ஒரு பெண்ணினுடையதெனக் கண்டான். கழல் நெளிவில் அமைந்த மயக்கை நோக்கி நின்று விரல்கள் மலர்க்கன்றுகளென மண்ணை உந்தியெழும் பாவனையை…
50: திசையிலான்
பட்டினத்தின் முகவாயில் கடந்த பெருங்கூட்டமொன்றிற்கிடையில் இரு கருங்காளைகள் பூட்டிய வண்டிலில் சிகை காற்றில் தீவிலகலெனப் பறக்கக் கொற்றன் எழுந்து நின்றான். விசும்பிடை உதித்துக் கதிரினைச் சூடி மண்ணளையும் சிறுகுழவியென அந்தரத்தை ஆட்டிடும் ஆதவன் மைந்தனென அவன் மேனியெழில் தோற்றிற்று. கூட்டத்திலிருந்த இளம் பெண்கள் கலகலத்து…
49: ஆடி மயில்
திருதிகா தோழிகளுடன் மாற்றுடை அணிந்து தன்னைக் குடிகள் அறியாத வண்ணம் உருமாற்றிக் கொண்டாள். மன்றுக்குச் செல்லும் பெருவீதியால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வண்ண பேதங்களை நோக்கிக் களிச்சிரிப்பாடினர்கள் தோழியர். திருதிகா ஒவ்வொன்றையும் தொட்டு எடுத்து நோக்கினாள். ஒவ்வொரு ஆடியிலும் தன்னை உற்றாள். ஒவ்வொரு…