மென்னிழைகளால் நெய்யும் பூமி
எந்தவொரு கலைக்கும் ஞாபகத்துக்கும் உள்ள தொடர்பென்பது மிக அந்தரங்கமானது. அது தான் கலையின் வேலை. ஞாபகத்தை ஞாபகத்தின் மூலம் ஞாபகப்படுத்துதல். அதன் மூலம் அந்தரங்கமான வகையில் அதை அனுபவிப்பவனிடம் ஏற்படுத்துவது. கிளர்த்துவது. ஈழத்து சிறுகதை வரலாற்றில் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களினதும் ஒரு கதையைத் தானும் படித்திருக்கிறேன் . மிகப் பிரபலமானவர்களின் எல்லா தொகுப்புக்களையும் படித்திருக்கிறேன். ஆனால் முழுமை கூடிய இப்படி ஒரு தொகுப்பை படித்ததில்லை. ஒரு மகத்தான கலைஞனின் கைகளுக்குத் …
