Tag: புனைவு

20: முத்து எழல்

Kiri santh- June 3, 2024

கைகளை உயர்த்தி ஆடவரை நோக்கி வழியை விலத்திச் செல்லுங்கள் எனக் கத்தியபடி வெள்ளி முகபாடம் அணிந்த யானையிலிருந்து முத்தினியும் செழியையும் தாமரைக் காம்புகளைக் கூடையிலிருந்து அள்ளியெறிந்து பூசலிட்டனர். காவலுச் சென்று கொண்டிருந்த அலவனின் மீது ... Read More

19: லீலி எழல்

Kiri santh- June 3, 2024

விழிகளில் நீர்பெருக்கு அணைந்த போது லீலியா இளம் மஞ்சென ஆனாள். கடற்கரையில் அலைந்தும் பெட்டிகளின் மேல் தாவியும் கலகலத்தும் கொண்டிருந்த குடிகள் அவளுடைய நெடிய உருவைக் கண்டு விழி மலைத்து நோக்கினார்கள். செலினி ஒரு ... Read More

18: உசை எழல்

Kiri santh- June 2, 2024

முதற் சொல்லை உசை கேட்ட போது அது 'நீலா' என்றொலித்தது. தன் பசுஞ் சிறகுகளைக் கொத்தி அப்பெயர் தனக்குள் எங்கேயிருக்கிறதென்று தேடிச் சலிப்பவள் உசை. ஒவ்வொரு பீலியாய்க் கொவ்வைச் சொண்டால் கீறி இது தான் ... Read More

17: அரூபம் எழல்

Kiri santh- June 1, 2024

மதுச்சாலையின் அன்ன வடிவக் கொத்து விளக்குகள் ஒளிக்குமிழிகளைப் போல் ஓவியங்கள் தீற்றப்பட்ட சுவர்களிலும் தரையிலும் குமிந்திருந்தன. விளக்குகள் இல்லாத இடங்களில் கருமை கலைந்த கூந்தலெனப் படிந்திருந்தது. முது பாணர்களும் விறலியரும் பாகர்களும் படை வீரர்களும் ... Read More

16: ஈச்சி எழல்

Kiri santh- May 31, 2024

வெஞ்சுரம் நெஞ்சில் உலைய உடலை அசைக்காமல் இருண்ட குடிலின் கூரையை நோக்கியிருந்தாள் நிலவை. அவள் இக்குடிலுக்கு வந்து அரைப்பருவம் சென்றோடி விட்டது. இருளிலே இருந்து இருளிலே எழுந்து இருளிலே விழிகளைப் பார்த்து நாளெலாம் அமர்ந்திருப்பாள். ... Read More

15: நிலவை எழல்

Kiri santh- May 30, 2024

வெண் மெளனம் சூடிய நித்திய கல்யாணி மலரொன்றை நிலவை கூந்தலில் நுழைத்துத் தன் விரல்களால் அழுத்திக் கொண்டாள். உசை "நீலா. நீலா" என்று மிழற்றியது. உசை தன் சிவந்த ஆரத்தை வளைத்து கொழு அலகைத் ... Read More

14: இருதி எழல்

Kiri santh- May 29, 2024

ஆழி நிறைவது உப்பின் கண்ணீர் என நினைத்துக் கொண்டாள் இருதியாள். பனைகளின் பாளைகளில் கீறிய பசும் வெட்டிலிருந்து கள் கலயங்கள் நிறைவது மண்ணின் கண்ணீர் என விழிகளை உயர்த்தினாள். அலைகடலின் வெண்மணலில் வெய்யில் குழந்தை ... Read More

13: விருபம் எழல்

Kiri santh- May 28, 2024

பதும்மையும் இளம் பாணனும் காட்டின் ஒற்றை வழிக்குள் நுழைந்த பொழுது குருகெனக் காலசைத்து அவர்களை நோக்கி நாணிய பின் மனையின் பின் தூணில் சாய்ந்து நின்றாள் விருபாசிகை. மனையினுள்ளே வேறுகாடாரும் அங்கினியும் இன்னும் சில ... Read More

12: சுழல் எழல்

Kiri santh- May 27, 2024

ஆடற் சித்தரின் சொற்கள் சுழல் விழிக்குள் கலங்கிக் கலங்கி மண்கலயத்தில் நாணயங்களின் புரள்வென உருண்டன. வெளியே பகலின் வெளிச்சம் பதுங்கிக் பின்னால் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் சித்தரின் சொற்கள் உருண்டு உருண்டு ... Read More

11: உருகம் எழல்

Kiri santh- May 26, 2024

பாணர் குழுவொன்று புயலில் வீழ்ந்து கிடக்கும் மரமொன்றை மான் கூட்டமொன்று தாவிக் குதித்துச் செல்வது போல் வாகை சூடனைத் தாவிச் சென்றது. கால்களின் சத்தங்கள் குளம்பொலிகளென தன்னுள் எதிரொலிக்க மயக்கிலிருந்து கண்விழித்தான். நிலவு சரிந்து ... Read More