Tag: புனைவு
30: முதற் பருவம் : அறிக
புலரியின் முதற் புள் பாடத் தொடங்கி வனம் விழித்து சிறகுகள் கொண்டு பல்லாயிரம் பறவைகளின் குரல் நாண்கள் விடுபட்டு ஒலிப்பெருக்கனக் குழைந்தெழத் தொடங்கியது. காட்டு விலங்குகள் மானுட அதிர்வுகளை உய்த்து விலகிக் காட்டுக்குள்ளேயே அடங்கி ... Read More
29: பாலை உரைத்தது
"ஆடற் சித்தர் என்ன சொன்னார் அக்கா" என ஈச்சி ஆர்வம் அரணையென விழிகளில் நாநீட்டியாட வினவினாள். ஈச்சி வனக்குடிலுக்கு வந்து இருபருவம் கடந்து விட்டது. அங்கு நுழைந்த போதிருந்த வறுமையும் உடல்மெலிவும் நீங்கி எருக்கம் ... Read More
28: கல்மலர் உரைத்தது
"நண்பரே, நான் நெறியுள்ள போர் புரிபவர்களின் பக்கமே நிற்கிறேன். இந்தத் தீவில் நிகழ்வது நெறியின்மைகளுக்கும் நெறிகளுக்கும் இடையிலான யுத்தம்" என வீசிய காற்றின் விசை சென்று முடிந்த போது கூறினார் வேறுகாடார். உதய பூர்ணிகர் ... Read More
27: நீத்தல் உரைத்தது
களத்தில் காயம்பட்டு தம் உயிரின் அடிவேரைப் பற்றியபடி முனகிக்கொண்டிருந்த சிலரை அம்புக் குவியல்களுக்குள்ளிருந்து மீட்டு உதவுநர் படை மருந்துவக் குழுவிடம் கையளித்துக் கொண்டிருந்தது. சிங்கைப் படையின் அம்புப் பெருக்கு ஓய்ந்திருந்தது. கோட்டைக்குள் போர் நகர்ந்து ... Read More
26: ஒற்று உரைத்தது
நெடுத்து வளர்ந்த தேக்க மரங்களுக்குள்ளால் அமைந்த ஒற்றையடிக் காட்டுப் பாதையில் வேறுகாடார் இடாவத்த நகரின் எல்லையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டியோட்டிகள் சொன்ன தகவல்களின் படி இடாவத்த நகரின் மையத்தில் வழமைக்கு அதிகமாக ... Read More
25: சித்தர் உரைத்தது
மின்நேர் திரிசூலம் ஏந்தி ஏந்திவிடை மேல் வந்துதித்த விண் கதிரா அழல் குழலாதாளமிடும் துணங்கைகள் அணங்குகளாடிகூகைகள் பருந்துகள் ஆந்தைகளாடிகணங்களும் பூதங்களும் திசைகளுமாடிஆடலும் பாடலும் ஆடியாடிஆடிய பொற்கழல் ஏறியாடிவீசிய வார்சடை விம்மியாடிமிடற்றினில் நச்சமுது கூடியாடிகுருதியில் கூற்றன் ... Read More
24: வேழம் உரைத்தது
குருதி வெண்கோட்டு விரிவேழமேநீயுரைஎங்கோன் ஆற்றிய செங்களம் மிதித்த உன்கோற் கால்கள் எக்கனம் பொருதின எவ்விசை ஏகினகொல்வேழ் குறும்பாநின் திசை நோக்கிய என் துதி நீண்டிலைஆயிரம் ஆயிரம் பொன்னெதிர் கதிரேமாகரம் தூக்கி நின் சூர்முகம் போற்றி ... Read More
23: வெறியாட்டன் உரைத்தது
ஆடுக ஆடுக பேய்க்களியொன்றைதேடுக தேடுக வெம்மார்பொன்றைதீயினில் கருக செந்நாவென்றைவேலினில் கூரிய கருநாவொன்றைஆடுக ஆடுக வெறியாட்டொன்றைதேடுக தேடுக குறுவாளென்றைகுருதியில் மலரச் செம்பூவொன்றைகுருதியில் மலரக் கரும்பூவொன்றை. வெறியாட்டன் சூர்விற்பன் வனக் கொற்றவையின் கற்சிலையில் நீண்டிருந்த தளிர் நாக்கை ... Read More
22: தூமழை உரைத்தது
செருக்களமேவிய புரவியே நீயுரைமாகளன் ஏந்திய வாள்முனை கண்டனையோமின்னவன் விழிகள் உற்றனையோகூவிடும் புலிக்குரல் கேட்டனையோதேர்ச்சில் சுழல் குருதிக் கூத்தில் தாளக் கால் பூண்டனையோஇன்னிரா இராத்திரியில் சுடர் மீன்கள் விம்மினையோஅழியாட்டு வெஞ்சேற்றில் அழலெனத் திரும்பினையோ வருதோழர் உயிர் ... Read More
21: சங்கு உரைத்தது
ஆங்கிவன் அளித்த அடு தமிழ்ச் சங்கே ஓங்கி நீயுரைஆழி வயிறு புக்குவேன் செருச்சேறு பூசுவேன்தூமிகு வெண்சங்கே நீயுரைஏதற்ற பெம்மான் எந்தை குலப் புலிஏற்றிய நுண்சங்கே நீயுரைகூடிய விறலியர் பாணரும் பொருநரும் கூறிய கூர்வாள் தடங்கை ... Read More