Tag: புனைவு

63: நினைவாலயம்

Kiri santh- July 16, 2024

காவற் தகடுகள் வனவிலங்குகளிடம் கையளிக்கப்பட்டு சடங்குகளை முடித்த பின்னர் மேனியால் வழியும் வியர்வையூற்றைக் காற்றில் நனைந்து கொட்ட விட்டுவிட்டு பெருமரங்களினது நிழல்வழிச் சாலையில் குடிகளின் நிரைகளினூடாக நாகதேவி கோவிலை நோக்கிக் காவற்படையினருடன் நடந்து சென்று ... Read More

62: புரவி அரசன் : 02

Kiri santh- July 15, 2024

உயம்பவின் விழிகளில் மினுங்கிய சினம் செங்கருவிழிகளென அழல் கொண்டிருந்தது. லாமக தன் பொற்சிறகுகளை அம்புச் சிதறலென உலுப்பி உயம்பவை நோக்கிச் சொல்லற்று நின்றது. உயம்ப மெல்லக் கனைத்து அமர்ந்தபடியே குரலை நாணேற்றியது போல் பேசத் ... Read More

61: புரவி அரசன்

Kiri santh- July 14, 2024

அசல பெருங்கூம்பு மலையெனக் கண் முன் எழுந்து நின்ற சர்க்கரீஸ் கூடத்தை நோக்கி நின்றான். சுபல நிரந்தரமானது என்பது போன்ற அவனது திறந்த வாயுடன் கூம்பின் ஓவியங்களையும் அதில் வரையப்பட்டிருந்த அதிசய உயிரிகளையும் கண்கொட்டாமல் ... Read More

60: பாடு மீன்கள்

Kiri santh- July 13, 2024

அறியாத போது சிந்தும் கண்ணீர் ஆயிரம் மடங்கு சிறகுகள் கொண்டவை. அவை மேனியை மிதத்தி அகத்தை உருக்கி திரவச்சிறகுகள் பூண்கின்றன. காலில்லாக் கண்ணீர் கன்னத்தில் நடக்கின்றது. விழியில்லா அந் நீர் விழிமயக்கு அளிக்கிறது. கண்ணீரின் ... Read More

59: காய விழைஞன் : 02

Kiri santh- July 12, 2024

பித்தர் விழிதிறந்து நோக்கிய போது சலனமற்ற நீர்ப்பரப்பில் ஓடும் ஒளிச்சில்லுகளைக் கண்டேன். சினமென அமைந்த உவகை அவரிடம் சுவறியிருந்தது. பெண்கள் கூந்தலில் நறுமணமென எண்ணிக் கொண்டேன். அலைந்து அலைந்து என் அகம் அவரைக் கண்ட ... Read More

58: காய விழைஞன்

Kiri santh- July 11, 2024

"நான் அஞ்சுவது என் தாகத்திற்கு மட்டுமே" என்றான் ஓசையிலான். "நீ சொல்லிய சொற்கள் எங்கோ எவரோ சொல்லிக் கொண்டிருக்கும் நீண்ட பாடலின் சிறு சிரங்கையளவு கொண்டவை. அவை வாழ்வை அறிந்து விலகியவர்களுக்கானது. உனது நாவுக்குச் ... Read More

57: நூறு தேனீக்கள் : 02

Kiri santh- July 10, 2024

புரவியின் ஆண்குறி சளசளக்க அதை வாயிலிட்டுக் குதப்பினாள் சுகுமாரி. பராக்கிரம தன் குறியில் அவள் வாய் உமிகிறது என எண்ணிக் கொண்டான். உடல் மெய்ப்புக் கொண்டு வியர்வை நழுவத் தொடங்கியது. புரவி தாங்காத வேகத்தில் ... Read More

56: நூறு தேனீக்கள்

Kiri santh- July 9, 2024

பராக்கிரம வீர தன் கழலில் கட்டியிருந்த கரும்புண்ணை நோக்கியபடி அன்ன சத்திரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது உச்சிவெயிலின் கனற்கட்டியொன்று தன் கழலில் துடிக்கிறதென எண்ணினான். தன் தோள்களை அழுத்தி நரம்புகளை இறுக்கிக் குருதியை ... Read More

55: அத்திரிச் சாம்பல் : 02

Kiri santh- July 8, 2024

"அம்புகளால் எய்தெறிந்த புயற் காற்றென அக்கையின் பக்கச் சிறகு வேல் முனையை நெருங்கி பருந்து ஒற்றைச் சிறகால் கொல்வேல் முனையை அணைப்பதைப் போல் குவிந்தது. பின்னிருந்து வந்த வேழப்படை அக்கையின் பின்னர் ஒருங்கியது. உக்கிரமான ... Read More

54: அத்திரிச் சாம்பல்

Kiri santh- July 7, 2024

"துயரை தெய்வத்துக்குச் சூட்டுவதன் மூலம் தங்களில் ஒருவரென தெய்வத்தை மானுடர் கீழிறக்குகிறார்கள் பெருந் தளபதி" என்றார் முதுதேரோட்டி அரும்ப முல்லர். சத்தகன் அவரை நோக்கிப் புன்னகைத்து விட்டு "துயரா. அது போர்க்களத்தில் ஒரு ஆயுதம் ... Read More