ஒரு தடுப்பும் மூன்று நாவல்களும் – வி. கணேஷ்
இலக்கிய உலகில் ஒரு பிராந்திய மொழியில் குறிப்பிடத்தக்கதொரு பெருநிகழ்வு எழுவது மிக அரிது. அவ்வகையில் தமிழ் மொழியில் நிகழ்ந்த அத்தகையதொரு நிகழ்வுதான், இலங்கையைச் சேர்ந்த மூன்று இளம் தமிழ் எழுத்தாளர்களின் மூன்று நாவல்கள் ஒரே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வெளியாகியிருப்பது: யதார்த்தனின் ‘தோறை’, கிரிசாந்தின் ‘தத்வமசி’, மற்றும் தர்மு பிரசாத்தின் ‘வண்ணச்சீறடி’. கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் பல படைப்புகள் தமிழ்நாட்டில் வெளியாகி, பரவலாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்துள்ளன. …
