தோழர் க. தணிகாசலம் – அமுத விழா

தேசிய கலை இலக்கியப் பேரவையின் பொதுச்செயலாளரும் இன்று வரை மக்கள் போராட்டங்களுக்குச் செல்லும் முதுதோழருமான க. தணிகாசலத்தின் எண்பதாவது அகவை பூர்த்தியில் அவருடனான அனுபவப் பகிர்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். களப்பணி ஆற்றுபவர்கள் ஒவ்வொரு நிலத்தினதும் தன் காலத்து அடித்தட்டு வாழ்க்கை முதல் மேல்தட்டு வரை விரிவான அனுபவம் கொண்டவர்கள். களமென்றால் என்ன, அங்கு இயங்கும் விசைகள் எவை, ஊடகங்கள் காட்டும் வேறொரு மெய் என்ன, மக்களின் இயல்புகள் எவையென விரிவாகவே அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள சமூகத்திற்கு அவசியமிருக்கிறது.

என் கல்விரல் நாவலை க. தணிகாசலத்திற்கும் செந்திவேலிற்குமே சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர்களது வாழ்நாள் பங்களிப்புக்கு எழுத்தாளர்கள் சார்பிலிருந்து ஒரு  ஏற்பெனெ.  அவர் மீது தனிப்பட எனக்கு மிகுந்த மதிப்பும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *