யதார்த்தனின் ‘தோறை’, தர்மு பிரசாத்தின் ‘வண்ணசீறடி’ இரண்டு நாவல்களும் தற்போது இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம்.
கிரிசாந்
*

“காலச்சுவடு பதிப்பகத்தால் செம்படெம்பர் மாதம் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய தோறை நாவல் தற்பொழுது சென்னையில் உள்ள காலச்சுவடு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் கிடைக்கிறது. குறித்த புத்தகக் கடைகளில் இணைய வழிகள் மூலமும் இந்திய , தமிழ்நாட்டு நண்பர்கள், வாசகர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான புத்தகங்கள் விரைவில் கிடைக்கும்”
யதார்த்தன்

*
“பதிப்பாளர் நீலகண்டன் செய்தி அனுப்பியிருந்தார். நல்ல செய்திதான். வண்ணச்சீறடி நாவல் அச்சாகிவிட்டதாம். அச்சகத்திலிருந்து தாளும் ஈர மையுமாகச் சுடச்சுட வந்திருக்கிறதாம். செய்தியுடன் நாவலின் ஒரு படமும் அனுப்பியிருந்தார். படத்தில் நாவலின் அட்டையின் கறுப்பும் செம்மஞ்சளும் துலக்கமாகத் தெரிகின்றன. உதயத்தை அளையும் தளிர் விரல்களா? அன்னையின் ஈரக் கதகதப்புள் சுருண்டிருக்கும் மகவா? கருவறையின் செம்மஞ்சள் பிரதிபலிப்பா? தெரியவில்லை. ஈழ வழக்கில் சொல்வதென்றால் மாட்டுத்தாள் சுற்றி அழகாகப் பொதியப்பட்டிருக்கும் பொதியின் மேல் சரிந்து அமர்ந்திருக்கிறது நாவல்.
ஆம், வண்ணச்சீறடி நாவல் வெளியாகிவிட்டது நண்பர்களே.
பிரதி விரும்பும் இந்திய நண்பர்கள் கருப்புப் பிரதியில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தோழர் நீலகண்டனைத் தொடர்பு கொள்ளலாம்”
தர்மு பிரசாத்


