எழுத்தாளர் கூட்டறிக்கை – இறுதி வடிவம்
ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அடங்கிய பொதிகள் தபால் வழியாக இலங்கைக்கு வரும்போது, இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் சில பொதிகள் தடுத்து வைக்கப்படுகின்றன. அந்த நூல்களில் உள்ள சில சொற்கள் அல்லது அட்டைப்படம் போன்றவை அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுவதே இதற்கான காரணமாகச் சுங்க அலுவலர்களால் கூறப்படுகிறது. நூல்களை மீளப் பெறுவதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை எனச் சுங்க அலுவலர்கள் தெரிவித்து, நூல் பிரதிகளைப் பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனைக்கு …
