முன்னெப்போதுமில்லாத அளவு சமூக வலைத்தளவாசிகளும் மக்களும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு முன்வர ஆரம்பித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாவது நாள் மதியத்திலிருந்து அது முடியும் இறுதித் தருணம் வரை அந்த போராட்டப் பந்தலையே சுற்றிக் கொண்டிருந்தேன். இரவில் அந்த உண்ணாவிரதிகளுடன் உரையாடுவதும், பகலில் வரும்…
மெரினாவின் அலை ஒதுங்கிய கரை
ஏராளமான விமர்சனங்கள் வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது உருவாகி வருகிறது. வழமையை விட கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல் இடம்பெற்று வந்த காணாமல் ஆக்கப்பட்டு வந்தோர், அரசியல் கைதிகள், பயங்கரவாதச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல அரசியல் பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள்…
ஜல்லிக்கட்டு – ஒரு அசலான மாற்றத்தைக் கற்றுக் கொள்ளுதல்
தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்திற்கு உலகம் முழுவதுமுள்ள பெரும்பாலான தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழக இளைஞர்களினதும் மக்களினதும் போராட்ட நியாயத்தினை அங்கீகரித்து கவனயீர்ப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். கடந்த பல தசாப்தங்களில் ஒரு மொழியாக தமிழர் சேர்ந்து…
ஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு?
தொடர்ந்து ஒரு சில மாற்றுக் கருத்தாளர்களால் இந்தக் கேள்வி முன்வைக்கப் பட்டு வந்துகொண்டிருக்கிறது. மூன்று விதத்தில் ஈழத்திலிருக்கும் கருத்தாளர்கள் அதனை எதிர்ப்பதாக நான் மட்டுக்கட்டுகிறேன். 1 – இது ஒரு சாதிய விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.2 – இது ஒரு ஆணாதிக்க…
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது?
( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில்…
மாற்றுக் குரல்
யாழ்பாணத்தைச் சேர்ந்த மாற்றுப்பாலினத்தவர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட உரையாடல்களை கடந்த காலத்தில் இரண்டு முறை விதை குழுமம் ஊடாக நிகழ்த்தியிருந்தோம், முதலாவதாக அவர்களின் பிரச்சினைகளை அவர்களே உரையாடுவது நிகழ்ந்தது. அதில் பல விவாதங்களை நிகழ்த்தி சில முடிவுகளுக்கு வந்திருந்தோம். ஒரு பொது…
எந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம்?
யாழ்ப்பாணத்தின் சிறுதெய்வ வழிபாட்டு முறையில் நிலவி வந்த ‘பலியிடும்’ வழக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பலியிடும் வழக்கம் தொடர்பாகவும், அதன் வரலாற்றுப் பின்புலங்கள் சமூக நம்பிக்கைகள் பற்றியும், மேலும் இதன் எதிர்ப்பின் பின்னாலுள்ள நியாயங்களையும் அரசியலையும் பற்றி விவாதிக்கும் பத்தியே…
மென்னிழைகளால் நெய்யும் பூமி
எந்தவொரு கலைக்கும் ஞாபகத்துக்கும் உள்ள தொடர்பென்பது மிக அந்தரங்கமானது. அது தான் கலையின் வேலை. ஞாபகத்தை ஞாபகத்தின் மூலம் ஞாபகப்படுத்துதல். அதன் மூலம் அந்தரங்கமான வகையில் அதை அனுபவிப்பவனிடம் ஏற்படுத்துவது. கிளர்த்துவது. ஈழத்து சிறுகதை வரலாற்றில் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களினதும் ஒரு கதையைத் தானும்…
வெறுப்பை விதைத்தல்
“வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளையிட்டு அச்சமாயிருங்கள்” – அல் குர் ஆன் – திகனயில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்குப் பின் நாடு முழுவதும் அமைதியின்மை நீடிக்கிறது. பற்றியெரியும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் வீதிகளையும் மனங்களையும் இந்தத் துன்பியல் சம்பவம் உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை இனக்குழுக்களின் மேல் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும்…
எங்களைக் கொல்வது உங்களின் மெளனம் தான்
பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால்? ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது சாதாரண மக்களின் குரல். அறத்தின் குரல். சிரியாவின், கிழக்கு…