போரிலன் ஆதல் : யதார்த்தன் – செவ்வி
ஈழப் புனைவுகளில் வடிவ கச்சிதத்தை அடைந்தவர் ஷோபாசக்தி. அவருடைய படைப்புகளில் நிகழ்ந்தது ஈழப் புனைவுகளின் ஓர் உச்சம். அவரது நாவல்கள் வடிவத்தால் சிறியவை. சிறு கத்தியால் கச்சிதமாக நறுக்கப்பட்டவை. ஆனால் புனைவினால் சாத்தியமான உச்ச எல்லைகளைத் தொட்டு மீளக் கூடியவை. போரின் வன்முறை, அராஜகம், அதிகாரத்தின் முன் சமானியனின் தத்தளிப்பு, நவீன அரசின் குரூரம் போன்ற தனிமனித அனுபவ எல்லைக்குள் இருந்து அமைப்பை, அதிகாரத்தை விமர்சனபூர்வமாகப் பேச அவருடைய சிறிய …
