மாசற்ற இனிப்பு
சின்னஞ்சிறு பெண் என
கண்ணாடியின் முன் நிற்கிறாய்
மலர்போல இதழ் குவித்து
காலத்தின் சுவடுகளற்ற
கண்கள்
காதலை அழைக்கின்றன
உன்னை எதுவுமே மாசுபடுத்தாதா என்ன
குரலில்
ஒரு துயரில்லை
தொடுதலில்
ஒரு கள்ளமில்லை
எல்லையற்ற தீமைகளில்
உன் இருப்பு ஒரு சீனிப்பரல்
என் உப்புக் கடல் தடுமாறுகிறது
சதீஷ்குமார் சீனிவாசன்

