ஒரு தடுப்பும் மூன்று நாவல்களும் – வி. கணேஷ்

இலக்கிய உலகில் ஒரு பிராந்திய மொழியில் குறிப்பிடத்தக்கதொரு பெருநிகழ்வு எழுவது மிக அரிது. அவ்வகையில் தமிழ் மொழியில் நிகழ்ந்த அத்தகையதொரு நிகழ்வுதான், இலங்கையைச் சேர்ந்த மூன்று இளம் தமிழ் எழுத்தாளர்களின் மூன்று நாவல்கள் ஒரே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வெளியாகியிருப்பது: யதார்த்தனின் ‘தோறை’, கிரிசாந்தின் ‘தத்வமசி’, மற்றும் தர்மு பிரசாத்தின் ‘வண்ணச்சீறடி’. கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் பல படைப்புகள் தமிழ்நாட்டில் வெளியாகி, பரவலாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்துள்ளன. …

தமிழ் நூல்களும் மீண்டும் மீண்டும் தொடரும் சுங்கத் தலையீடுகளும் – ரதீந்திர குருவித

‘யதார்த்தன்’ என்ற புனைபெயரில் எழுதிவரும் எழுத்தாளர் பிரதீப் குணரத்தினம், இந்தியாவிலுள்ள தனது பதிப்பகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட தனது புதிய நாவலின் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அக்டோபர் 22 அன்று யாழ்ப்பாணப் பிரதான அஞ்சலகத்திற்குச் சென்றார். தனது வாசகர்களுக்காக அனுப்பிவைக்கப்பட்ட புத்தகங்களோடு வீடு திரும்புவார் என்றே அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவரது புத்தகங்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஆய்விற்காக அனுப்பிவைத்த சுங்க அதிகாரிகள், அவருக்கு ஒரு சுங்கக் கட்டணப் பற்றுச்சீட்டை மட்டுமே கையளித்தனர். தமிழ்நாட்டிலுள்ள …

Three Novels, One Ban – Southbound review

ஈழத்திலிருந்து வெளியாகும் மூன்று நாவல்களினதும் முக்கியத்துவத்தினையும் சுங்கத்தின் தடுப்பை பற்றியும் Southbound review கட்டுரை வெளியிட்டிருக்கிறது. வி. கணேஷ் என்பவர் எழுதியிருக்கிறார். முழுக்கட்டுரைக்கான இணைப்பு கீழே. “The three writers share several commonalities. They belong to the generation that emerged in Sri Lanka in the aftermath of the long civil war. Each has developed a distinct aesthetic vision …

தோழர் க. தணிகாசலம் – அமுத விழா

தேசிய கலை இலக்கியப் பேரவையின் பொதுச்செயலாளரும் இன்று வரை மக்கள் போராட்டங்களுக்குச் செல்லும் முதுதோழருமான க. தணிகாசலத்தின் எண்பதாவது அகவை பூர்த்தியில் அவருடனான அனுபவப் பகிர்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். களப்பணி ஆற்றுபவர்கள் ஒவ்வொரு நிலத்தினதும் தன் காலத்து அடித்தட்டு வாழ்க்கை முதல் மேல்தட்டு வரை விரிவான அனுபவம் கொண்டவர்கள். களமென்றால் என்ன, அங்கு இயங்கும் விசைகள் எவை, ஊடகங்கள் காட்டும் வேறொரு மெய் என்ன, மக்களின் இயல்புகள் எவையென விரிவாகவே …

புத்தகம் என்ன தங்கமா? – கோ. நாதன்

நண்பரொருவர் கீழ்வரும் முகநூல் பதிவை அனுப்பி வைத்திருந்தார். யாரிது எனக் கேட்டேன். ஏகத்துவன் என்றார். பெயரே பழைய பின்னநவீன கால சுடோக்குப் பெயர் போலிருக்கிறதே. ஆளின் உண்மையான பெயர் என்னவென்று கேட்டேன். எனக்கு இந்தப் பதிவை அனுப்பிய நண்பரோ இலக்கியத்தில் சர்ச்சைகளை மட்டுமே வாசிக்கும் சர்ச்சைப் பிரியர். பதிலுக்கு அவருக்கு இன்னொரு பெயர் இருக்கு என பாட்ஷா ரேஞ்ச் பில்டப் கொடுத்தார். “அது என்ன?” என்று கேட்டேன். சிரிக்கும் ஸ்மைலி …

எழுத்தாளர் கூட்டறிக்கை – இறுதி வடிவம்

“சுங்கத் திணைக்களத்தினூடாக எடுக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சிடம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை விடுவிக்கோரி ஜனநாயக ரீதியில் ‘கருத்துச் சுதந்திரத்தின்’ உறுதிப்பட்டை நாட்டினுள் பேணச் சொல்லி அரசை கவனிக்கக் கோரி வெளியிடப்பட்ட எழுத்தாளர் கூட்டறிக்கையில் மொத்தமாக 109 பேர் உடன்பட்டு கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஈழத்துச் சூழலில் இது ஓர் அரிதான ஒருங்கிணைவு. வரலாற்றுத் தருணம். பண்படுதலின் ஓரடி. இந்தக் கையொப்பங்கள் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கக் கூடியவை என்று அறிந்தும், கருத்துச் …

ஈழத்து வாசகர்களுக்கு

எனது புதிய நாவலான ‘தத்வமசி’ தற்போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகிலிருக்கும் வெண்பா நூல் மனையில் கிடைக்கும். அவர்களிடம் தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். வெண்பா இணையத்தளம். என்னிடம் நாவலை வாங்க விரும்புபவர்கள் தபால் மூலமாக பெற்றுக் கொள்ள, கீழ்வரும் வங்கிக் கணக்கிலக்கத்திற்கு 4000 ரூபாயை வைப்புச் செய்த பின்னர் வைப்புச் சிட்டையை 0775889397 எனும் இலக்கத்திற்கு வட்ஸ் அப் மூலம் அதன் பிரதியையும் உங்கள் முகவரியையும் அனுப்பி வையுங்கள். பதிவுத் …

‘எழுத்தாளர் எனும் நிமிர்வு’ – காயத்ரி

Arun Ambalavanar அவர்களுக்கு,நீங்கள் பொதுவில் எழுதியதால், பொதுவில் பதில். நான் ஐரோப்பாவில் இருப்பது தற்செயலானது. அந்தச் சூழலில், ஓர் இலக்கிய நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கலந்துகொள்கிறேன். இதற்குப் பின்னால் நீங்கள் கற்பிக்கும் எந்த ரகசிய நிகழ்ச்சி நிரலும் இல்லை. யாருக்கும் நற்சான்றிதழ் வழங்குவதற்காகவோ, யாருடைய கடந்தகாலத்தையும் கழுவித் தூய்மைப்படுத்துவதற்காகவோ நான் இந்த மேடையில் ஏறவில்லை. ஒரு இலக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்கு முன், அதன் ஏற்பாட்டாளர்களின் வாழ்க்கை வரலாறையும், …

வெள்ளி வீதியில் புதிய நாவல்கள்

சுவிஸில் நவம்பர் 1 நிகழவிருக்கின்ற வெள்ளி வீதி இலக்கியச் சந்திப்பில் எனது தத்வமசியும் தர்மு பிரசாத்தின் வண்ணச் சீறடியும் யதார்த்தனின் தோறையும் விற்பனைக்கு கிடைக்கும். ஆர்வமுள்ள நண்பர்கள் நாவல்களை வாங்கி வாசித்து, உங்கள் கருத்துகளை விரிவாக எழுதி அனுப்புங்கள்.