சி. அ. யோதிலிங்கம் : அஞ்சலி
தமிழ்த்தேசியம் சார்ந்த நெடுங்கால அறிவுப் பங்களிப்பையும் களச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர் சி. அ. யோதிலிங்கம். அவரது தமிழ்த்தேசியம் உறுதியானது. அதை அவர் முழுமையாகவே நம்பினார். இறுதி வரை அவர் தனது நிலைப்பாடுகளுக்கென உழைத்துக் கொண்டிருந்தார். அவரது நூல்கள், சிறு பிரசுரங்கள் அரசறிவியலின் அடிப்படைகளையும் தமிழ்த்தேசியத்தின் சமகாலம் வரையிலான தொடர்ச்சிக்கு அதன் சிந்தனைப் பங்காளிகளாக இருந்த சமூகத்தின் அரசியல் தரப்பின் கருத்துகளின் தொடர்ச்சியாகவும் இருந்தன. மு. திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்றவர்களின் இன்னொரு …
