சொல்லேர் உழவர் பகை
நம்ம மோகனா அக்கா மறுபடியும் களத்தில் காளான் கதாயுதத்துடன் தோன்றி சன்னதமாடியிருக்கிறார். சபாஷ். “உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது” என்று கேட்டிருக்கிறார். நியாயம் தான். அவர் போன்ற பாமரருக்கு இந்த அதிகாரம் காலம் தோறும் எப்படிக் கைமாறி வருகிறதென்று தெரியாது. அவர்களுக்கு அதை விளக்க வேண்டிய அவர்கள் காலத்து எழுத்தாளனாகிய நான் சொல்லக் கூடியது எளிமையானது. சாபவிமோசனம் கதையில் சீதையை தீக்குழிக்கச் சொல்லி ராமன் கேட்டான் என்பதை அறிந்து, …
