நூலக எரிப்பு முதல் தோறை வரை – ப. பார்தீ
யாழ் நூலக எரிப்பிலிருந்து தோறை வரை ஒட்டியிருப்பது சிங்கள பேரினாவாத அதிகாரத்தின் அரசியல் ஒடுக்குமுறையே. பேரினவாதத்தின் அதிகாரம் ஒருபோதும் சிறுபான்மை மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்குத் துணைநின்றதில்லை. அதேபோல, அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தையும் அது ஒருபோதும் முழுமையாக அங்கீகரித்ததில்லை. இதற்கான வரலாற்றுச் சாட்சிகள் எம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. 1981இல் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதிலிருந்து, இன்று தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்படுவது வரை, அதிகாரத்தின் வடிவங்கள் மாறியிருக்கின்றனவே தவிர, …
