நூலக எரிப்பு முதல் தோறை வரை – ப. பார்தீ

யாழ் நூலக எரிப்பிலிருந்து தோறை வரை ஒட்டியிருப்பது சிங்கள பேரினாவாத அதிகாரத்தின் அரசியல் ஒடுக்குமுறையே. பேரினவாதத்தின் அதிகாரம் ஒருபோதும் சிறுபான்மை மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்குத் துணைநின்றதில்லை. அதேபோல, அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தையும் அது ஒருபோதும் முழுமையாக அங்கீகரித்ததில்லை. இதற்கான வரலாற்றுச் சாட்சிகள் எம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. 1981இல் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதிலிருந்து, இன்று தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்படுவது வரை, அதிகாரத்தின் வடிவங்கள் மாறியிருக்கின்றனவே தவிர, …

ශ්‍රී ලංකාවේ පොත් රඳවා තබා ගැනීම: ලේඛකයන්ගේ ඒකාබද්ධ ප්‍රකාශය 

ඊළම් දෙමළ ලේඛකයන් විසින් රචිත පොත් අඩංගු තැපැල් පාර්සල ශ්‍රී ලංකාවට එවනු ලබන විට, ඒවායින් ඇතැම් පොත් ශ්‍රී ලංකා රේගු දෙපාර්තමේන්තුව විසින් රඳවා තබා ගනු ලැබේ. එම පොත්වල අඩංගු ඇතැම් වචන හෝ පොත් කවරවල ඇති අංග දේශපාලන කැළඹීම් ඇති කිරීමට ඉඩ ඇති සංවේදී කරුණු ලෙස සලකනු ලබන බව රේගු නිලධාරීහු …

புத்தகத் தடுப்பு : எழுத்தாளர் கூட்டறிக்கை

இலங்கையில் தொடர்ந்து வரும் புத்தகத் தடுப்புத் தொடர்பாக ஜனாதிபதியினதும் அமைச்சினதும் திணைக்களத்தினதும் ஊடகங்களினதும் தலையீட்டைக் கோரி இந்தக் கடிதம் எழுத்தாளர்களின் சார்பில் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இதில் தங்கள் பெயர்களை இணைக்க விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை Kirishanth300@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 0775889397 எனும் வட்ஸ் அப் இலக்கத்திற்கோ அனுப்பி வையுங்கள். இலங்கையில் புத்தகத் தடுப்பு: எழுத்தாளர்கள் கூட்டறிக்கை ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அடங்கிய பொதிகள் தபால் வழியாக இலங்கைக்கு …

மூன்று ஈழத்து நாவல்கள் – ஜெயமோகன்

“… ஏனென்றால் இலக்கியம் மானுட உள்ளம், வாழ்க்கைத்தருணங்கள், வரலாற்றுப்போக்கு, தத்துவம் ஆகியவற்றின் பன்மைத்தன்மையையும் உட்சிக்கலையும் முன்வைக்கும்பொருட்டே செயல்படுகிறது. இலக்கியம் முன்வைக்கும் பன்மைத்தன்மையை, நுட்பத்தை, அவற்றைக் கண்டடைவதற்கான அதன் தனித்த பயணத்தை போர்த்தரப்புகள், அவை எவையானாலும், மீறலாகவே காணும். பலி வாங்கவே முயலும். போர் முடிந்தபின்னரும்கூட அந்த உக்கிரமான வெறுப்புகளும் காழ்ப்புகளும் குறைந்தது ஒரு தலைமுறைக்காலம் அவ்வாறே நீடிப்பதை உலகமெங்கும் காணலாம். இலங்கைச்சூழலும் அப்படித்தான். இந்த வெறுப்புச்சூழல் மொத்தச் சிந்தனையுலகை நஞ்சூட்டுகிறது. …

சுங்கத் திணைக்களத்திற்கு நாவல் எழுதுதல்

2008, கள்ளிவாய்க்கால், மாலை ஐந்து மணி. சூரியன் கவனமாக மேகங்களுக்குள் ஒளிந்து கொண்டது. கள்ளி வாய்க்காலின் கரையில் ஏனென்று தெரியாமல் போன மாமிக்காரர்களைப் பார்த்து மனிதர்கள் எல்லாம் மகிழ்ச்சியின் உச்சியில் கைகால்கள் இழுபட, முகங்களும் தசைகளும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தாங்க முடியாமல் துடிக்க கண்ணிலிருந்து திரவம் சிந்த கடற்கரை மணலில் கிடந்தனர்.  தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்க வந்த காவலர்களே என ஒரு முதிய கிழவி மண்டியிட்டு அமர்ந்து வானத்தைப் …

அமுக்கி அரசு – ஷோபசக்தி

எழுத்தாளர் யதார்த்தனின் ‘தோறை’ நாவல்கள் வந்த பொதி, யாழ்ப்பாணம் தபால் நிலையத்திலுள்ள சுங்கப் பிரிவால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. நாவலில் இராணுவம் குறித்த சில சொற்கள் உள்ளதுவே காரணம் எனச் சாட்டுச் சொல்லப்பட்டுள்ளது. நாவலின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து அனுமதி கிடைத்த பின்பே புத்தகப் பொதியை விடுவிக்கலாம் எனச் சுங்கப் பிரிவு யதார்த்தனிடம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட புத்தகப் பிரதி குறித்து அந்த அமைச்சு எதுவுமே சொல்லாது. புத்தகப் …

இடதுசாரி அரசாங்கமும் எழுத்தாளரும்

யதார்த்தனின் புதிய நாவலான தோறை காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வெளிவந்து ஒரு கிழமை இருக்கும். வெளிவந்து இரண்டாவதோ மூன்றாவது நாள் யதார்த்தன் தனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை பகிர்ந்திருந்தார். தோறை நாவலை அடிப்படையாகக் கொண்டு முனைவர் பட்டம் செய்யவிருப்பதாக இந்தியாவிலிருந்து ஒருவர் அதற்கு உதவி கேட்டு அனுப்பியிருந்தார்.  இப்போது நாவல் வரவிருக்கும் சுவிசில் நிகழும் வெள்ளி வீதியில் கிடைக்கவிருக்கிறது. இலங்கைக்கான புத்தகங்கள் நேற்றே கிடைத்துவிடும் எனச் சொல்லி …

வேழாம்பல் தவம் – நேர்காணல்

“மூன்று நாவல்கள் ஏககாலத்தில் வெளி வந்திருக்கின்றன. மூன்றும் ஈழ நாவல்கள். கிரிசாந்தின் ‘தத்வமசி’, யதார்த்தனின் ‘தோறை’. இவை இரண்டும் காலச்சுவடு வெளியீடுகள். என்னுடைய ‘வண்ணச்சீறடி’ கருப்புப் பிரதிகள் வெளியீடு. கவனமாகத் திட்டமிட்டால் கூட இந்தத் ‘தற்செயல்’ சாத்தியமாகுமா தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் ஊழ் சமைந்திருக்கிறது. இவற்றுள் எழுதிய காலத்தால் மூத்தது தத்வமசி. பிறகு தோறை.  அவை இரண்டும் இந்த வருட ஆரம்பத்திலேயே வெளியாகியிருக்க வேண்டியவை.  நாவல்களை எழுதும் காலத்தில் மூவரும் …

தத்வமசி – சென்னையில்

காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வரும் என்னுடைய புதிய நாவலான தத்வமசி தற்போது சென்னையில் கிடைக்கிறது. பிரதியொன்றின் விலை 500 ரூபாய்கள்(இந்திய மதிப்பில்). ஒரு தெய்வத்தை எழுப்புதல் – முன்னுரை