மூர்க்கனும் விழைவியும் – கீதிர் கவிதைகள்
கவிஞர் ஆனந் குமார் முகநூலில் கீதிர் என்பவரின் கவிதைகளை பகிர்ந்து பாராட்டியிருப்பதாக நண்பர் ஒருவர் அனுப்பி வைத்தார். கீதிரின் முகநூலில் போடப்பட்டிருந்த கவிதைகளை வாசித்துப் பார்த்தேன். சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. நவீன கவிதைகளின் அடிப்படையான சிக்கல் இலங்கைச் சூழலில் படைப்புச் சார்ந்து அதன் மொழி சார்ந்து இருக்கிறது. கீதிரின் கவிதைகளின் படைப்பு மொழியில் வெளிப்படும் ‘பச்சையான பெண்’ அல்லது ‘விழைவு கொண்ட பெண்’ உடனடியாக கவனத்தை …
