செயற்களம் புகுவோருக்கு

ஒவ்வொரு சமூகப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் அததற்கான தனித்தன்மையான அணுகுமுறைகளைக் கோரக் கூடியவை. அப்பிரச்சினைகளைக் கையாளும் தனிமனிதர்களோ சமூக மட்ட அமைப்புகளோ யாரும் எவை குறித்தும் முழுமையான அறிதல்களோ பார்வைகளோ தீர்வுகளோ அறிந்தவர்களல்ல. தொடக்கத்தில் அச் சிக்கலும் அதைத் தீர்க்க வேண்டும் என்ற உந்துதலும் அவர்களிடமிருக்கும். எந்தவொரு செயற் தொடக்கமும் நாம் அவதானிக்கும் அன்றாடத்திலிருந்தே நம்முள் விதையென விழுகின்றன. நாம் அவற்றால் அலைக்கழிகிறோம். என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்கின்றோம். ஆனால் செயல்படுதலென்பது …

நிலமீட்புக்கான மக்கள் போராட்டங்கள் – அடைவுகளும் நிலமைகளும்

இரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்து தமது நிலங்களைத் தமக்கே தாருங்கள் என்று தமிழ் பேசும் மக்கள் தமது ஜனநாயக வழிப் போராட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்லிய அலைபோலத் தானும் இடைவிடாது மோதிக்கொண்டிருந்தனர். இரண்டாயிரத்துப் பதினைந்து, ஆட்சி மாற்றத்தின் பின்னர், பெருமெடுப்பில் இப்போராட்டங்கள், வெகுசன எழுச்சியாகவும், பிறரையும் உள்ளீர்த்துக் கொண்ட விரிந்த போராட்டங்களாகவும் உருமாறின. முதலில், …

ஆமிக்காரனே! எயார் போஸே!

கேப்பாபுலவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பல வகையில் முக்கியமானது. ஈழத் தமிழர் வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தொடர்ந்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமிது. இவற்றை சரியான வழியில் நகர்த்திச் செல்ல வேண்டியதும் ஆதரவளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். கேப்பாபுலவு மக்கள் இந்த போராட்டத்தின் போது காட்டும் உறுதி மெய்ச்சத் தக்கது. அங்கு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று வீதியில் படுத்து பனியில் நனைத்து …