மாய மருத்துவம்

வசீகரமான ஒரு பரிசை, ஒரு ஆச்சரியத்தை முதன் முதலில் ஒருவருக்கு அளிக்கப் போகும் மனம் சிலிர்த்துக் கொண்ட மயிர்க்கொட்டியென சுணைத்தபடியும் உள்ளூர வியந்தபடியும் நடந்து கொள்ளக்கூடியது. நான் யாருக்கும் பரிசளிப்பதில்லை. அல்லது ஒரு பொருளை பரிசென்னும் மகத்துவத்துடன் காவிச்செல்வதில்லை. எனக்குப் பரிசளிக்கப்படுவதிலும் ஆர்வமற்றவன். அதில் ஏதோவொரு கொழுவி எனக்குள் இருக்கிறது. ஒரு விலக்கம். பரிசுடன் வருபவர் என்னை நெருங்கிவிடுவார் என்பது போல் ஒரு மயக்கு. இதயத்தை மட்டும் இதுவரை பரிசளித்திருக்கிறேன். …