குத்திக் கிளறலும் அரிதாரத்தை அசிட் ஊற்றிக் கழுவுதலும்

கருத்துச் சுதந்திரம் என்பது செயற் சுதந்திரமல்ல என்ற அடிப்படையிலிருந்தே எனது பார்வை உருவாகியிருக்கிறது. கருத்துகள் முன்னேற்றமடைவதற்கு, முரணியக்கங்கள் தமக்குள் தொடர்ந்து உரையாடி, ஒரு சமரசத்தை எட்டி, மேலும் தொடர்ந்து விவாதித்து, விரிவாகிக் கொண்டு செல்லக்கூடிய மாபெரும் உரையாடற் பரப்பாக ஆக வேண்டும், அதில் ஒரு சிறு துளியே நாம் ஒவ்வொருவரும் ஆற்றும் கருத்தியல் பங்களிப்பு. ஒவ்வொரு தரப்பிற்கும் அவற்றுக்கான வரலாற்றுப் பின்னணிகள், அதன் வழி உருவான பார்வைகள், நலன்கள் எல்லாமே …

கருத்தியல் தலைமையும் அறமும்

சிறுகுழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், சமூகங்களாக உருப்பெற்று ஒரு மொத்தமானுட, பூமிபற்றிய உடன்படிக்கைக்கைக்குமான உரையாடல் வெளிக்குள்வந்து சேர்ந்திருக்கிறோம் .சமூகம் மற்றும் பூமி போன்றவற்றுக்கு இடையில் மனிதர்கள் உருவாக்கியிருக்கும் உடன்படிக்கையானது, எத்தகையது என்பது காலத்திற்குக்காலம் மாறியும் மேம்பட்டும் வந்திருக்கின்றது. நமதுஎதிர்காலத்திற்கான அடிப்படைகளை உருவாக்குவதற்கு ஜனநாயகத்தைஅடிக்கட்டுமானமாக உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம். திக்கற்ற அலைச்சலில் இருந்து திரும்பும் மனித சமூகம் வேர்கொண்டுவாழத்தொடங்கியதற்குப்பின் திரும்பவும் பொருளுள்ள அலைதலே வாழ்வாகும். இதற்கிடையில் அறிவு மற்றும் அதிகாரப்பரம்பல் பூமியின் சகல …