எஸ் ராமகிருஷ்ணன் எழுத்தாளர்கள் குறித்து உரை நிகழ்த்தும் பொழுது பெரும் கேளிக்கையுடன் தன் விளையாட்டுப் பாவையை உலகிற்கு அறிமுகம் செய்யும் குழந்தை போலாகிவிடுவார். அவரது பேச்சுகளின் வழி அந்த எழுத்தாளரின் வாழ்வு ஒரு தொன்மக் கதை போலாகிவிடும் அழகியல் கொண்டவர். தாஸ்தவெஸ்கி பற்றிய இந்த…
அஞ்சலிக் கூட்டம்
மறைந்த ஈழத்து நாடக முன்னோடி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு 21. 01.2025 மாலை மூன்று மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையின் ஏற்பாட்டில் நிகழவிருக்கிறது.
ஈழத்து நாட்டார் தெய்வங்கள்
எழுநா இணைய இதழில் தி. செல்வமனோகரன் எழுதி வரும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து நாட்டார் தெய்வங்கள் குறித்த வரலாற்று மற்றும் சமகாலப் பயில்வுகள் குறித்த புறச்சித்திரத்தை அளிப்பவை. வாசிப்பில் ஒரு நேர்கோட்டை இழுத்துக் கொண்டு செல்வது போல ஒன்றன்…
அஞ்சலி
ஈழத்தின் நாடக வரலாற்றின் முதுதந்தை குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் காலமாகி விட்டார். அவர் எனதூரைச் சேர்ந்தவர். எனது வீட்டிலிருந்து ஐந்தே நிமிடங்களில் சென்று விடக் கூடிய தூரம். இளவயதில் அவர் ஒவ்வொரு காலையிலும் சைக்கிளில் தின்னவேலி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு…
அ. முத்துலிங்கம் : நேர்காணல்
ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான அ. முத்துலிங்கம் அவர்களின் இந்த நேர்காணல் அவரது எழுத்துகளைப் பற்றியும் பார்வைகள் பற்றியும் சற்றே விரிவான தகவல்களை அளிக்கக் கூடியது. அவரது எழுத்துகளைப் போலவே நேர்காணலில் அவரது குரல் செறிவாக வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்ப நிலை இலக்கிய வாசகர்கள்…
பொலிக!
மானுடருக்கு கலையும் இலக்கியமும் எதை அளிப்பதற்காக மண் நிகழ்கின்றது என்பதும் எதன் பொருட்டு என்பதும் பல முதன்மையான கலைஞர்களால் சொல்லப்பட்டே வருவது. ஜெயமோகனே குறைந்தது ஆயிரம் உவமைகளால் சொல்லியிருப்பார். இன்று இந்தக் காணொலி இன்னொரு உவமையிலிருந்து தோன்றுவது. பொலிக என ஆணையிடுவது!
ஆட்டுக்குட்டி சுவேதா : குறிப்பு
பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். அந்தச் சூழல் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாமே…
ஆகப் பெரிய கனவுகள்
கடந்த வருடம் தும்பி சிறார் இதழ்நிறுத்தப்பட்ட செய்தி வெளியாகிய போது அதன் பயணத்தைத் தொடருபவர்கள் அடைந்த இழப்புணர்வும் துக்கமும் தும்பி எனும் மகத்தான கனவினை நீங்குவதன் துயரே. இவ்வருடம் தும்பி இதழ் மீளவும் சித்திரை முதல் நாள் வெளிவரும் எனும் பெருமகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது….
முக்காலமும்
நட்சத்திரங்கள் உதிராத வானமுண்டுநீலம் கலையாத ஆழிகளுண்டுமீன்கள் வாழும் மலைகளுண்டுநிலவும் சூரியனும் பருவங்களுமுள்ளன தூண்டிலைப் பிடித்திருப்பவர்ஒரு நூற்றாண்டு காத்திருக்கிறார் பிறகு விழித்துக் கொள்கிறார்ஒரு மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் போல. ஓயாது புலரும் பொழுதுகளுக்கும் அணைபவற்றுக்கும் இடையில்எரியாது சுடரும் சுடர்பூத்திருக்கிறதுமுக்காலமும்.
தன்னறம் : சாம்ராஜ் உரை
தன்னறம் விருது 2024 இல் சாம்ராஜ் ஆற்றிய உரை. ஷோபா சக்தியின் புனைவுகள் பற்றிய பார்வைகளைச் சுருக்கமாக விபரித்திருக்கிறார்.