68: மங்காத கருமை
“மானுடரில் உறையும் அசுரத்தனத்தை விடுவிப்பதென்பது பெண்ணை விடுவிப்பதாலேயே நிகழும் இளம் பாணனே. பெண்ணின் வேட்கையாலேயே புடவி இல்லமென மானுடருக்கு அமைந்தது. ஆடவர் அனைவரும் அவளின் எளிய பணியாட்கள். தன்னை ஆள்பவரை அஞ்சாத பணியாள் எவர். ஆகவே பெண் குடிநெறிகளால் சிறையிடப்பட்டாள். நெறியே அவளின் முதற் பிடிகாப்பு. அதை என்றைக்கும் நினைவு கொள்ளவே கைவளைகள் அணிவிக்கப்படுகின்றன” எனச் சொல்லி உரக்கச் சிரித்தார் வேறுகாடார். “நீங்கள் பெண்களில் அடிவேருக்கு அப்பாலும் வெறுப்புக் கொண்டவர் …
