வரலாறும் கலையும் இயைந்த பிரதிகள் – ஷோபாசக்தி

தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடியும் இலங்கையின் இடதுசாரித் தலைவர்களில் ஒருவரும் சாதியொழிப்புப் போராட்டக் களத்தின் முன்னணியில் நின்றிருந்தவருமான எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் நூற்றாண்டு இது. இதையொட்டி அவரது ஆறு நாவல்களை ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகம் திருத்தமான செம்பதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது. ‘பஞ்சமர்’, ‘அடிமைகள்’, ‘கோவிந்தன்’, ‘தண்ணீர்’, ‘பஞ்ச கோணங்கள்’, ‘கானல்’ ஆகிய ஆறு நாவல்களதும் முதன்மைக் கதாபாத்திரங்கள் தலித்துகள். நாவல்களின் களம் தலித் மக்களின் வாழ்வியலும் வாழ்தலுக்கான போராட்டமும். இந்த …

முதலில் உதித்த செஞ்சூரியன்

  இம்மாதம் 20 ஆம் திகதி ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கே. டானியலின் நூற்றாண்டு நினைவும் அவரது நாவல்களினது செம்பதிப்புகளின் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் உள்ள றிம்மர் மண்டபத்தில் மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நிகழ இருக்கின்றது. வாசகர்களும் எழுத்தாளர்களும் நம் முன்னோடிகளை நினைவு கொள்ளவும் மீள வாசிக்கவும் உரையாடவும் விவாதிக்கவும் இத்தகைய தொடர் நிகழ்வுகள் அவசியமானவை. ஆர்வமுள்ளோர் வருக. கே. டானியல் படைப்புகள்