திரிச்சுடரின் உள்ளே ஆடும் கலை
எந்தவொரு கலை வெளிப்பாட்டிற்கும் அதனுள் இயங்கும் படைப்பாளியின் ஆளுமையின் கூர்மையான பங்களிப்பிருக்கும். கலையின் ஒருமையும் வெளிப்படும் அழகியலும் அவரின் தனித்த அகத்தின் விந்தையான கலவையால் உண்டாவது. ஓர் ஆளுமையென்பது சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஆழ்மனத்தின் ஒரு துளி அவரில் செறிந்து கனிகிறது. நாம் இன்று முன்வைக்கும் பண்பாடென்பது அத்தகைய ஆளுமைகளுக்கு ஊடாக வெளிப்படும் ஒரு கனவையே. அவர்களின்றி ஆழ்மனம் வெளிப்பட முடியாது. வெளிப்பட்டு சமூகத்துடன் உரையாடி அதை மாற்ற முடியாது. …
