தத்வமசி : முற்பதிவு

“17ஆம் நூற்றாண்டின் சோழமண்டலக் கரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் டச்சுக்காரர்களின் காலனிய நிழல் படர்கிறது. குருதியும் அடிமை வணிகமும் பேரழிவும் மலிந்த பெருநிலத்தில், வாழ்வின் நிலையாமையை முகத்திலடித்தாற் போல் உணர்ந்து மனை துறக்கிறான் ஒருவன். 

அகத்தின் வெளிச்சத்தைத் தேடி அலையும் அவனுக்குக் காலம் சூட்டும் பெயர் ‘தத்வமசி’.

கிரிசாந்தின் பிரம்மாண்டமான புனைவெழுத்து, வரலாற்றின் அந்தகார உண்மைகளையும் தத்துவத்தின் ஆழங்களையும் ஒன்றிணைக்கிறது. மானுட இருப்பைப் பற்றியும், அதன் நித்தியமான ஆன்மீகத் தேடலைப் பற்றியும் துணிச்சலாகக் கேள்வி எழுப்பும் ஒரு காலத்தின் பெருஞ்சித்திரம். 

அதிகாரத்தின் வாள்முனையில் அடியோடு வீழும் வாழ்விலிருந்து, ஆத்மா தன் விமோசனத்தைக் கண்டடையும் தத்துவப் பயணம் இந்நாவல்”.

பின்னட்டைக் குறிப்பு

*

எனது புதிய நாவல் ‘தத்வமசி’ காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வரும் மாதம் வெளிவர இருக்கிறது. ஒரு நூலின் இந்திய விலை 500 ரூபாய்கள். இலங்கை மதிப்பில் இந்தியாவிலிருந்து அனுப்புச் செலவு, எழுத்து ஊதியம், உள்ளூர் தபால் செலவு உட்பட 4000 ரூபாய்க்கு கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் வாங்குவதற்கான விருப்பமிருப்பின் Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அல்லது 0775889397 எனும் வட்ஸ் அப் இலக்கத்திற்கோ முற்பதிவினை மேற்கொள்ளுங்கள். எத்தனை பிரதிகள் தேவை என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. பணம் இப்பொழுது செலுத்த தேவையில்லை. பொதிச்செலவுகள், தபாற் செலவுகள் குறையுமிடத்து நூலின் விலை குறையும், என்னவாயினும் மிகாது. 

இந்தியாவிலிருந்து பார்சல் மூலம் சிறு தொகை நூல்களை கொள்வனவு செய்ய இருக்கிறேன். அதில் உள்ளூரின் மேலதிக தேவையையும் கணக்கிடுவதற்காக இந்த அறிவிப்பு. மொத்தமாக எத்தனை நூல்கள் தேவையென்றால் அவற்றை மட்டுமே பார்சலில் பெற இருக்கிறேன். ஆகவே விரும்பியவர்கள் பதிவினை மேற்கொள்ளுங்கள். 

One Comment on “தத்வமசி : முற்பதிவு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *