ஜல்லிக்கட்டு – நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பொலிஸ் மாணவர்களை நெருக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பெரும் அளவில் அரச இயந்திரத்தினால் ஒடுக்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் பல நாடுகளிலும் கவனயீர்ப்புகள் இடம்பெற்றன.சமூக வலைத்தளங்களிலும் பொது இடங்களிலும் இது பற்றி கார சாரமான பல விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள …

மெரினாவின் அலை ஒதுங்கிய கரை

ஏராளமான விமர்சனங்கள் வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது உருவாகி வருகிறது. வழமையை விட கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல் இடம்பெற்று வந்த காணாமல் ஆக்கப்பட்டு வந்தோர், அரசியல் கைதிகள், பயங்கரவாதச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல அரசியல் பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாக்கியிருக்கும் அலை என்பது புதியது. வழமையாக சோக ஸ்ட்டேட்டஸ் போட்டு கண்ணீர் புரொபைல் போட்டு கடந்து விடும் ஆயிரக்கணக்கான …

ஜல்லிக்கட்டு – ஒரு அசலான மாற்றத்தைக் கற்றுக் கொள்ளுதல்

தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்திற்கு உலகம் முழுவதுமுள்ள பெரும்பாலான தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழக இளைஞர்களினதும் மக்களினதும் போராட்ட நியாயத்தினை அங்கீகரித்து கவனயீர்ப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். கடந்த பல தசாப்தங்களில் ஒரு மொழியாக தமிழர் சேர்ந்து நிகழ்த்தும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் இதுவாகத் தானிருக்கும். ஈழத்தமிழர் போராட்டம் முக்கியமானது. ஆனால் இதன் அம்சமும் வடிவமும் மிக முக்கியமாக நாம் அவதானிக்க வேண்டியதென்று …

ஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு?

தொடர்ந்து ஒரு சில மாற்றுக் கருத்தாளர்களால் இந்தக் கேள்வி முன்வைக்கப் பட்டு வந்துகொண்டிருக்கிறது. மூன்று விதத்தில் ஈழத்திலிருக்கும் கருத்தாளர்கள் அதனை எதிர்ப்பதாக நான் மட்டுக்கட்டுகிறேன். 1 – இது ஒரு சாதிய விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.2 – இது ஒரு ஆணாதிக்க விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.3 – ஈழம் தனக்கான தனிப் பண்பாட்டை உருவாக்க வேண்டும், இங்கேயே 1008  பிரச்சினைகள் உள்ளன. அதனால் நாம் …