ஆகப் பெரிய கனவு

குழந்தைகளுக்கான உலகை உருவாக்கும் கைகளே இப்புவியில் மகத்தான எடையின்மை கொண்டவை. குழந்தைகளுக்காகக் காணும் கனவுகளே தூய்மையின் பொற்சிறகணிந்தவை. குழந்தைகளின் நிலையெண்ணிக் கண்ணீர் சிந்தும் விழிகளே தெய்வம் உறையும் அகல்கள். தும்பி சிறார் இதழ் தனது 81 ஆவது இதழுடன் பொருளாதாரச் சுமையால் தனது பறத்தலை நிறுத்துவதாகக் கண்ட அறிவிப்புத் தான் இதுவரையான வாழ்நாளில் நான் வாசித்த ஆகத் துயரார்ந்த செய்தி. தும்பியைப் போல் ஒரு இதழ் தமிழில் நிகழ்ந்தமை நம் …

கண்ணீருடன் ஒரு பறத்தல்

தும்பி அச்சு இதழை நிறைவுசெய்கிறோம்… பத்து வருடங்களுக்கு முன்பு, பாரம்பரிய நெல் விதைகளைப் பெண்களிடம் ஒப்படைக்கும் நெல் திருவிழா திருவண்ணாமலையில் நிகழ்ந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான கிராமப் பெண்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நல்லதிர்வுகள் நிறைந்த நாள் அது. அந்நாளில், நம் நிலத்தின் பலநூறுவகை பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுக்கத் தன் வாழ்வை ஒப்படைத்த ‘நெல்தந்தை’ வெங்கடாசலம் அய்யாவுக்கும், சிறார் இலக்கியத்தின் முன்னோடி ஆளுமை வாண்டுமாமா அவர்களுக்கும் முகம் விருதளித்து கெளரவிக்க எண்ணியிருந்தோம். உடல்நோய்மை …

அந்தந்த நாள்களின் நற்குணங்களால்…

கவிதைக்கு மிருதுவான தோல் வளர்ந்து மென்மயிர்கள் முளைத்த குட்டிப் பூனையாய் ஒரு குழந்தையின் கையிலிருப்பதைப் போல் தர்மினியிடம் கவிதை மொழி பயின்று வருகிறது. வாலை மெல்ல நேராக நிமிர்த்தியபடி கொட்டும் மழைக்குள்ளால் ஓடி, ஈரத்தை உதறிக்கொண்டே வெதுவெதுப்பைத் தேடிச்செல்லும் பூனையென மென்பஞ்சுத் தோலாடையின் மீது சாய்ந்து கொண்டே கணகணப்பூட்டிக் கொள்கிறது. கீழுள்ள இரண்டு கவிதைகளிலும் பயிலப்படும் மொழி தமிழ்க்கவிதைகளில் முக்கியமான ஒரு அடைவு. ஒரு குட்டிப் பூனையின் நேர்த்தி என்று …

கடவுள் இருக்கான் குமாரு

அன்று சிவராத்திரி. அம்மாவை காலையில் கோவிலில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளின் மீது சாய்ந்த வாறு போனை எடுத்து வைபர் அரட்டைகளை கிண்டத் தொடங்கினேன். தோழியொருத்தி வீடியோ லிங் ஒன்றை அனுப்பியிருந்தாள். அது ஒரு தமிழ் குறும்படத்தின் லிங்“கடவுள் இருக்கான் குமாரு” என்று அதன் பெயர் குறிப்பிட்டு இருந்தது. எனக்கு உடனே விடயம் புரிந்தது நேற்றிரவு “கடவுள் இல்லையென்று ”நான் அவளுடன் நடத்திய விவாதத்திற்கு வலுச்சேர்க்க அவள் தன்பங்கிற்கு அனுப்பிய …

காமம் செப்பாது

உலகை ஒரு தட்டையான மாபெரும் புல்வெளியென உருவகித்துக் கொண்டால் அதில் கோடிக்கணக்கான புரவிகள் ஒன்றுரசி ஒன்றுமேவிப் பாய்ந்து நகர்வது போல் காமத்தின் பயில்வுகள் நகர்ந்து கொண்டிருகின்றன. காமம் மானுட விசைகளில் அடிப்படையானது. அதன் நுண்மைகள், உச்சங்கள், பிறழ்வுகள், அதீதங்கள், மரபுகள், நெறிகள், தவறுகள், சரிகள் தான் மானுட உறவுகளைத் தீர்மானிக்கும் அடிப்படையான கூறு. அதே நேரம் காமம், காமத்திற்கு அப்பாலான வாழ்வின் விசைகளையும் நோக்கி நகர வேண்டியது. காமத்தின் எல்லைகளுக்கு …

மறைந்து மறைந்து தெரியும்

காதலினால் ஊதப்படும் வண்ணச் சவர்க்காரக் குமிழியில் ஒளிரும் அபூர்வமான நிறச் சிதறல்கள் எண்ணற்றவை. காதலின் கணங்களும் அத்தகைய விரிவுகள் கொண்டவை. இன்றைய காலகட்டத்தில் காதலின் பெரும்போக்கான ஒற்றை உரையாடல்கள் உடைப்பெடுத்து அதீத மிகை பாவங்கள் கைவிடப்பட்டு, அதனை அதுவாகவும், அதன் இருட்டையும் ஒளியையும் நிறங்களின் கரைசலெனவும் கலைகள் ஆக்கக்கூடிய காலம். இக்காலத்தின் கவிதைகளில் வெளிப்படும் நுண்மைகள் இதற்கு முன்னர் இத்தனை எளிய வடிவத்தில் நுண்மையாக்கம் பெற்றதில்லை. போகன் சங்கரின் சில …

மோட்டார் – சைக்கிள் குறிப்புகள்: 01

”என்ர தண்ணியத் தவிர வேற ஒண்டையும் குடிக்க மாட்டன் ” அழுத்தம் திருத்தமாக உலகத்திற்கு அறிவித்தாள் அந்தக் கிழவி. ஒரே ஒரு முறை மட்டுமே அவளது கண்களை நேரே பார்த்தேன் – ஆழமான இரண்டு கிணறுகளைப் போலிருந்த அந்தக் கண்களில் நீர் நிரம்பியிருந்தது. தனிப்பட்ட பயணமாக ஏழாலை வடக்கு மற்றும் மல்லாகத்திலும் உள்ள கழிவொயிலால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிடவும் மக்களை சந்தித்து உரையாடவும், எனது இரண்டு நண்பர்களுடன் பயணித்தேன். ஒரு …

செயற்களம் புகுவோருக்கு: 02

வரலாற்றின் திரைச்சீலைகள் சுன்னாகம் நிலத்தடி நீரில் அங்குள்ள மின்சார உற்பத்தி நிறுவனமொன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் மூலம் அந்தச் சுற்றுவட்டத்தில் நீர் மாசடைந்திருக்கிறது என்பதை நான் அறிந்த போது வருடம் 2015. விதை குழுமம் ஆரம்பித்த புதிது அது. பெப்ரவரி 14 காதலர் தினத்தில் காதல் கவிதைகள் வாசிப்பதற்கான நிகழ்வொன்றை யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தோம். சுன்னாக நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்கள் …

இந்தாங்கோ இனிப்புத் தட்டு

வாழ்வில் இனிப்பதைப் பகிர்வதே முதன்மையானது. நாம் வாழும் காலம் தினந்தோறும் எதிர்மறை மனநிலைகளாலும் கசப்பின் கசடுகளாலும் பனித்திரையெனச் சூழப்பட்டிருக்கிறது. இதனிடையில் இந்தா வைத்துக் கொள் என வயதான பாட்டியோ தாத்தாவோ யாருமறியாமல் கைபொத்தி அழுத்தித் தரும் ரகசிய இனிப்புத் துண்டெனக் கவிதைகளை எழுதுகிறார் ஆனந்த்குமார். இனிப்பின் தித்திப்பை நாவுகளும் காதுகளும் இதயங்களும் மறந்துபோகலாகாது. வாழ்க்கை மகிழ்ச்சியான கணங்களின் தொகுப்பாக மட்டுமே எஞ்சுவது. அதற்கு மேல் எதுவும் கணக்கல்ல. வாழ்வின் நொடிகளை …

கவிப்புதிர்

ஓர் அறிவிப்பு 52 வது சுவிஸ் இலக்கியச்சந்திப்பைத் தொடர்ந்து 53வது இலக்கியச் சந்திப்பை இத்தாலியின் சிசில் தீவில் நடத்தலாம் என இருக்கிறேன். அனலைதீவில் நடத்த ஆதரவளித்த நண்பர்கள் ஐரோப்பாவின் காலடியில் நசிவுண்டு கிடக்கும் சிசில் தீவில் 53வது இலக்கியச் சந்திப்பு நிகழ ஆவன செய்ய வேண்டுகிறேன். அந்த சிலக்கியச் சந்திப்பை ஒட்டியும் ஒரு தொகுப்பு வெளியிடலாம் என வேலைகளை ஆரம்பித்திருக்கிறேன். இம்முறை கவிதைத்தொகுப்பு. யாரையும் புண்படுத்தாத, விடுபடல்களே இல்லாத பெருந்தொகுப்பு …